உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் இன்று அதாவது 04-08-2011 அன்று பரிசில்நாள் நிகழ்வு வித்தியலய அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வானது பாடசலை முதல்வர் சி.மனோகரன் தலைமையில் முதன்மை விருந்தினரக உயர்திரு கு.கிவானந்தம்(கோட்டக்கல்விப் பணிப்பளர்-சாவகச்சேரி) அவர்களும் சிறப்பு விருந்தினராகளாக திரு ந.நவரத்தினராசா(ஓய்வு பெற்ற அதிபர்), திரு ஐ.ஆதவசர்மா(சாவகச்சேரி I.D.M கணனி கற்கை நிலைய நிர்வாக இயக்குனர்), வைத்திய கலாநிதி க.மாணிக்கம்(ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி), திரு ஐ.வரதரசா(ஓய்வு பெற்ற அதிபர்) ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள்.
வித்தியாலயத்தின் பரிசில் நாள் நிகழ்வில் முதலில் மங்கல விளக்கேற்றல் ஆரம்பித்து பின்னர் பரிசில் வழங்கல் நிகழ்வுடன் அங்கே கலந்து கொண்ட பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்கள் உரையுடன் மணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வின் இறுதி நிகழ்வாக பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் இ.முருகதாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.