அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, August 31, 2011

சிறப்பாக ஒன்று கூடிய கனடா வாழ் உசன் மக்கள்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் 2011 ம் ஆண்டுக்கான கோடை கால ஒன்று கூடல் மிக சிறப்பாக நடைபெற்றது.உசன் இரமானதான் மஹா வித்தியாலய பழைய மாணவனான MEGA Fainancial முகவர் ஜெயக்குமார் அவர்களின் மங்கள விளக்கேற்றலுடனும் ஸ்ரீ ஹரி குருக்கள் அவர்களின் ஆசி பூசைஉடனும் ஆரம்பமான நிகழ்வு விளையாட்டு போட்டி, பலவகை உடனடி உணவு தயரிப்புகளுடனும் சிறப்பாக நகர்ந்தது .பெருமளவு உசன் மக்களும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர் .




Sunday, August 28, 2011

கனடாவில் ஒன்றாகும் உசன் மக்கள்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் கோடைகால ஒன்றுகூடல் August 28, 2011, இன்று  ஞாயிற்றுக்கிழமை Neilson Park இல் ஆரம்ப வேலைகள் நடைபெற்றுள்ளன என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். அனைவரும்  உங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இன்றைய நிகழ வில் சிறப்பாக பொருட்கள் ஏலம்(Auction ) விற்பனையும் நடைபெற உள்ளது இதன் மூலம் உசன் மக்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்ததிக்கும் சந்தர்ப்பம் உண்டென்பதை அவர்களுக்கு இப்போதே தெரியப்படுத்துங்கள்.உறவுகளோடு கரம் கோர்த்து ஒன்றாகக் குதூகலிப்போம்! வாருங்கள் 


Saturday, August 27, 2011

இன்னுமிருப்பது இருபது மணித் துளிகள்.............




இன்னுமிருப்பது இருபது மணித் துளிகள்.............

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் 2011 ஆம் ஆண்டுக்கான கோடை கால ஒன்றுகூடலுக்கு
இன்னுமிருப்பது இருபது மணித் துளிகள்.............

ஊருக்காக ஒரு நாளை ஒதுக்கி, உறவுகளோடு கை கோர்க்க
இன்னுமிருப்பது இருபது மணித் துளிகள்.............

உழைத்துக் களைத்த உடலுக்கும், உள்ளத்துக்கும் உற்சாகம் ஊட்ட
இன்னுமிருப்பது இருபது மணித் துளிகள்.............

கோடை காலத்தில் ஒரு நாளைக் குதூகலமாகக் கொண்டாட
இன்னுமிருப்பது இருபது மணித் துளிகள்.............

வாருங்கள் உசன் மக்களே!
ஊர் மக்களோடு ஒன்றித்திருக்க உறவுகளையும் அழைத்து வாருங்கள்!

நாளை சந்த்திப்போம்!!!!



Thursday, August 25, 2011

திருமண வாழ்த்துக்கள்


உசனைசேர்ந்த திரு. திருமதி சின்னதுரை அவர்களின் புதல்வி நிருபா அவர்களுக்கும் , திரு. திருமதி சுந்தலிங்கம் தம்பதிகளின் புதல்வன் சுதாகர் அவர்களுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதி லண்டன் UK யில் திருமணம் இனிதே நடை பெற்றது. உசன் முருகன் துணை கொண்டு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும்,அனைத்து  உசன் அமைப்புகள் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கொறோம் .  


Monday, August 22, 2011

கண்ணீர் அஞ்சலி


கனேடிய ஈழத்தமிழர் அரசியலில் முதுகெலும்பாய் திகழ்ந்து ஈழத்தமிழனை கனேடிய பாராளுமன்றம்  வரை வரவேற்ற அன்பு மிக்க மான்பு மிகு மேன்மை தங்கிய திரு. Jack Layton அவர்கள் இன்று புற்று நோய் காரணமாய் 
சாவை அணைத்துக்கொண்டார் .
 ஈழத்தமிழன் வீதியில் நின்று நீதி கேட்ட பொது செவி சாய்த்த ஒரே உறவு 
இன்று விழி சாய்த்தது ......
 எம் இனத்தை உலகுக்கு காட்டிய ஒரே உறவு இன்று உயிர் சாய்ந்தது ....
உசன் மக்கள் உரிமையுடன் நாடி உதவி கேட்ட உள்ளம் இன்று ...
உறங்கியது .........
கனேடிய தமிழனின் விடிவெள்ளி தலை சாய்ந்தது ..........
அனைத்துலக உசன் மக்கள் சார்பாக ஆத்மசாந்தியடைய வேண்டுகிறோம் . 


Friday, August 19, 2011

31 ம் நாள் நினைவஞ்சலி




அம்மாவின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ..
அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம் ,



Saturday, August 6, 2011

உசனுக்கு உதவும் கனேடிய இளம் சமூகம்




உசனிலும் வன்னியிலும் போரினால் பாதிக்க பட்ட மக்களுக்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால்சேர்க்கபட்ட உடைகளை பாதுகாப்பாய் பொதி செய்யும் பணியில் இன்று கனடா வாழ் உசன் இளம் சமுதாய
வாலிபர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.


Friday, August 5, 2011

Haran Viswanathan - a future lawyer of USAN


உசனை சேர்ந்த நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகளின் பேரனும் விஸ்வநாதன் சரோஜினி அவர்களின் மகனுமான செல்வன் கரன் அவர்கள் , Toronto York University யில் Honours Bachelor of Arts in Psychology with Certificate in Ethics படிப்பை நிறைவு செய்து, தனது மேலதிக Lawyer (Juris Doctor). கல்வியை தொடர்வதற்காக அமெரிக்கா Florida வில் உள்ள சட்டத்துறை கல்லூரிக்கு செல்கின்றார். கரன் வெற்றிகரமாக தனது கல்வியை தொடர எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Haran Viswanathan, son of Thevabalan Viswanathan and Sharogene Thevabalan (USAN) has successfully completed the Honours Bachelor of Arts in Psychology with Certificate in Ethics at York University.  He is now further pursuing his education in Florida (US) to become a Lawyer (Juris Doctor).
Congratulations and we wish Haran the best for his future.


Thursday, August 4, 2011

உசன் இராமநாதன் மகா வித்தியாலய பரிசில் நாள் நிகழ்வு 2011


உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் இன்று அதாவது 04-08-2011 அன்று பரிசில்நாள் நிகழ்வு வித்தியலய அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வானது பாடசலை முதல்வர் சி.மனோகரன் தலைமையில் முதன்மை விருந்தினரக உயர்திரு கு.கிவானந்தம்(கோட்டக்கல்விப் பணிப்பளர்-சாவகச்சேரி) அவர்களும் சிறப்பு விருந்தினராகளாக திரு ந.நவரத்தினராசா(ஓய்வு பெற்ற அதிபர்), திரு ஐ.ஆதவசர்மா(சாவகச்சேரி I.D.M கணனி கற்கை நிலைய நிர்வாக இயக்குனர்), வைத்திய கலாநிதி க.மாணிக்கம்(ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி), திரு ஐ.வரதரசா(ஓய்வு பெற்ற அதிபர்) ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள்.


வித்தியாலயத்தின் பரிசில் நாள் நிகழ்வில் முதலில் மங்கல விளக்கேற்றல் ஆரம்பித்து பின்னர் பரிசில் வழங்கல் நிகழ்வுடன் அங்கே கலந்து கொண்ட பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்கள் உரையுடன் மணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வின் இறுதி நிகழ்வாக பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் இ.முருகதாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.