கடந்த ஒருவருடகால கடும் முயற்சியில் கனடா ஒன்றியமும் உசன் வாலிபர்களும் இணைந்து முன்னெடுத்து இயங்கிவரும் எமது usan.ca எனும் இணையதளமும் usanpeople எனும் Facebook தளமும்,அனைத்துலக உசன் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறோம்.இருப்பினும் பெருமளவுநேரத்தையும், செலவையும் எமது உறுப்பினர்களின் உழைப்பையும் தாண்டி உங்களிடம் வந்து சேரும் எமது சேவையானது
உசன் மக்களுக்கு தேவையற்ற செயல்பாடு என்ற ஒரு கருத்தும் பரிமாறப்பட்டு வருகிறது. எனவே இது குறித்த
ஒரு வாக்கெடுப்பை அனைத்துலக உசன் மக்களிடம் நடாத்தி அதில் கிடைக்கும் முடிவுடன் எதிர்காலத்தில் எமது பணியை தொடரலாம். அருகில் இருக்கும் கேள்விக்கு உங்கள் பதிலை தாருங்கள்.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை எமக்கு அறியத்தாருங்கள்.
aju@usan.ca