அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, June 18, 2011

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உடைஉதவி தேவை


அன்புடன் கனடா வாழ் உசன் மக்களுக்கு:

எமதுநாட்டில்நடந்த கொடூர யுத்தத்தில் தமது ஊரை இழந்து உறவுகளை, உடமைகளை, இழந்து அடைக்கலம் தேடி எமது உசன்கிராமத்தில் 14 குடும்பங்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் .வந்தோரை வாழவைத்த பரம்பரையும், செல்வ செழிப்பும் மிக்க ஊராக விளங்கிய எமது உசனுரில் அடைக்கலம் தேடியவர்களை அரவணைத்து அவர்களது வாழ்வாதாரத்தையும் அவர்களின் மனவேதினயையும் சற்றேனும் ஈடுசெய்ய வேண்டிய கடமை உசனுரில் பிறந்து வளர்ந்த ஒவோருவரது கடைமையாகும்.

அதை விட எமது கிராமத்திலே நீண்ட காலம் வாழும் 11 குடும்பங்கள் மிக வறுமை நிலையை அனுபவிக்கிறார்கள். மொத்தமாக உசனில் ஏறத்தாள 25 குடும்பங்கள் அவசர மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கை தரத்தை சற்றேனும் உயர்த்தி அவர்களின் வாழ்வியலில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தஅவர்களுக்கு கனடாவில் இருந்து புதிய அல்லது பாவித்த நல்லநிலையில் உள்ள ஆடைகளை அனுப்பிவைக்க முயற்சிக்கின்றோம். இதன் ஆரம்ப முயற்சியாக சில உடைகள் அனுப்பிவைத்து அவை சரியான முறையில் கொடுக்கபட்டுள்ளன.
அத்துடன் வன்னி பிரதேசத்திலும் சில பகுதிகளை எமது உசன் வாலிபர் சங்க உறுப்பினர்கள் தெரிவு செய்து அவர்களுக்கும் இந்த உடைகளை வழங்க விருப்பம் கொண்டுள்ளோம்.
இது தொடர்பாக பல உறவுகள் தம்மிடம் இருக்கும் உடைகளை தரவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதை சரியான முறையில் நிறைவேற்ற உங்களின் ஆதரவையும் உதவியும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் உங்கள் பங்களிப்பை விரைவாக தருவதன் மூலம் இந்த மனிதாபிமான உதவியை விரைவாக நிறைவேற்ற உதவி புரியுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு

அயு வெற்றிவேலு--- 4168332120

பாஸ்கரன் சுப்பிரமணியம்

உமா ராஜரத்தினம்

சிவா நவரத்தினம்

தயா சிதம்பரப்பிள்ளை

நகுலன் கனகசபை

பத்மன் சரவணமுத்து

ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்