கனடாவாழ் உசன் மக்களே!
உழைத்துக் களைத்த உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்கும் நாள்!
ஊரோடும், உறவுகளோடும் ஒன்றித்திருக்க ஒரு நாள்!!
கோடை காலத்தில் உறவுகளோடு கை கோர்க்க இன்னொமொரு நாள்!!!
கனடாவாழ் உசன் மக்கள் அனைவரும் ஒதுக்கி வைக்க வேண்டிய நாள்!!!
சனிக்கிழமை, July 16, 2011.
Oshawa வில் அமைந்திருக்கும் Lake View Park / Beach இல் உசன் மக்கள் அனைவரும் ஒன்றுகூடுவதற்கு அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.
உங்கள் சொந்த வாகனங்களில் வந்து போகலாம். உங்கள் உறவுகளையும் உங்களோடு அழைத்து வரலாம். கட்டணமின்றி உங்கள் வாகனங்களைத் தரித்துவிடும் வசதி உண்டு.
போக்குவரத்துக்கு உதவி தேவைப்படுபவர்கள் 416-833-2120 என்ற தொலைபேசி இலக்கத்தில் அஜந் வெற்றிவேல் உடன் July 12, 2011 ஆம் திகதிக்கு முன்பு தொடர்பு கொள்ளுங்கள். முன் தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக ஏனையோர் உங்கள் வருகையை அறியத் தாருங்கள்.
கூடிக் குடிக்கக் கூழும் உண்டு!
ஆம், உசன் மண்ணை நினைவுபடுத்தும் ஒடியல் கூழ் அங்கு வைத்துத் தயாரித்துப் பரிமாறப்படும்.
உங்களுக்குப் போதிய உணவுவகைகளை எடுத்து வாருங்கள், எல்லோரும் பகிர்ந்து உண்போம்.
கீழுள்ள இணைப்பில் Lake View Park / Beach குறித்த தகவல்களையும், பயணப் பாதையையும் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.oshawa.ca/mun_res/locationdetails.asp?step=2&stype=Both&nid=74
வாருங்கள், கோடை காலத்தில் இன்னொமொரு நாளை இனிமையாகக் களிப்போம்!
(குறிப்பு: வழமையான கோடைகால ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை, August 28, 2011 அன்று Neilson Park இல் நடைபெறும்.)