உசனில் உருவாக்கப்படும் பொது நூலகத்திற்காக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமானது புத்தகங்களை சேகரித்து வருகிறது. அந்த வகையில் ஒருசில உசன் பற்று கொண்ட உறவுகள் தாமாக முன்வந்து மிக பெறுமதி வாய்ந்த அரிய நூல்களை உசனுக்காக உவந்தளித்துள்ளனர்.
இருப்பினும் நீங்களும் உசனுக்கு மனமுவந்து வழங்கும் பொறுப்பு உள்ளது
எனவே உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் வேண்டி நிக்கிறோம்.
புத்தக அன்பளிப்பு வழங்க விரும்புபவர்கள் எமது ஒன்றியத்தின் உசன் பொதுநூலக நிர்வாக இயக்குனர்
திரு.உமாபதி ராஜரத்தினம் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். சேர்க்கப்பட்ட புத்தகங்கள்
9 th Line and HW 7 பகுதியில் பொதிசெய்யப்பட்டு வருகிறது அத்துடன் மிக விரைவில் இவை உசனுக்கு அனுப்படவுள்ளன உங்கள் ஆதரவை காலம் தாழ்த்தாது தந்துதவுமாறு உரிமையுடன் வேண்டுகிறோம்.