அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, June 11, 2011

மிருசுவிலில் வீதி விபத்து, வடக்கு மிருசுவில் இளம் பெண் மரணம்


 ஏ9 பிரதான வீதியில் மிருசுவில் சந்திக்குச் சமீபமாக நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணமான குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.மிருசுவில் வடக்கைச் சேர்ந்த யசோதரன் கெங்காதேவி (வயது 25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

ஏ9 பிரதான வீதியால் மிருசுவில் வடக்கை நோக்கி பிரஸ்தாபப் பெண் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
எதிரே கல் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்படுகையிலேயே குறித்த இளம்பெண்ணுடன் மோதியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் மிருசுவில் வைத்தியசாலைக்கும்  மிருசுவில் சந்திக்கும் இடையில் நிகழ்ந்துள்ளது.
தலையில் படுகாயமடைந்த குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி
 வைக்கப்பட்டது
.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனச் சாரதியை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளம் பெண் யுத்தத்தில் ஒரு கண்ணை இழந்தவராவார். அத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருசுவில் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வீதி விபத்துக்கள் குறித்து உசன் ஐக்கியவாலிபர் சங்கம். ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் ஆகிய உறுப்பினர்கள் யாழ் போக்குவரத்து போலீசார் மற்றும் வீதி பெரும்தேருக்கள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
உசன் மிருசுவில் பகுதியில் வேக கட்டுப்பாடு ,மற்றும் வீதி ஒழுங்கை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.