அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, June 30, 2011

செல்வன் ம.கவிமாறன் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கள்........


உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி.மதுராகரன் கோமதி தம்பதிகளின் புதல்வன் செல்வன் ம. கவிமாறன் தனது முதலாவது பிறந்த தினத்தை இன்று அதாவது 30-06-2011 அன்று உசன், மிருசுவிலில் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.


செல்வன் ம. கவிமாறன் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் திருவருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தினர் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா சார்பாகவும், அனைத்துலக உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.(மதுராகரன்:-0094-779006905)


Tuesday, June 28, 2011

கூடிக் குடிக்கக் கூழும் உண்டு!

கனடாவாழ் உசன் மக்களே!
உழைத்துக் களைத்த உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்கும் நாள்!
ஊரோடும், உறவுகளோடும் ஒன்றித்திருக்க ஒரு நாள்!!
கோடை காலத்தில் உறவுகளோடு கை கோர்க்க இன்னொமொரு நாள்!!!
கனடாவாழ் உசன் மக்கள் அனைவரும் ஒதுக்கி வைக்க வேண்டிய நாள்!!!

சனிக்கிழமை, July 16, 2011.

Oshawa வில் அமைந்திருக்கும் Lake View Park / Beach இல் உசன் மக்கள் அனைவரும் ஒன்றுகூடுவதற்கு அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.
உங்கள் சொந்த வாகனங்களில் வந்து போகலாம். உங்கள் உறவுகளையும் உங்களோடு அழைத்து வரலாம். கட்டணமின்றி உங்கள் வாகனங்களைத் தரித்துவிடும் வசதி உண்டு.
போக்குவரத்துக்கு உதவி தேவைப்படுபவர்கள் 416-833-2120 என்ற தொலைபேசி இலக்கத்தில் அஜந் வெற்றிவேல் உடன்  July 12, 2011 ஆம் திகதிக்கு முன்பு தொடர்பு கொள்ளுங்கள். முன் தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக ஏனையோர் உங்கள் வருகையை அறியத் தாருங்கள்.

கூடிக் குடிக்கக் கூழும் உண்டு!

ஆம், உசன் மண்ணை நினைவுபடுத்தும் ஒடியல் கூழ் அங்கு வைத்துத் தயாரித்துப் பரிமாறப்படும்.

உங்களுக்குப் போதிய உணவுவகைகளை எடுத்து வாருங்கள், எல்லோரும் பகிர்ந்து உண்போம்.
கீழுள்ள இணைப்பில் Lake View Park / Beach குறித்த தகவல்களையும், பயணப் பாதையையும் பெற்றுக்கொள்ளலாம்.

http://www.oshawa.ca/mun_res/locationdetails.asp?step=2&stype=Both&nid=74

வாருங்கள், கோடை காலத்தில் இன்னொமொரு நாளை இனிமையாகக் களிப்போம்!

(குறிப்பு: வழமையான கோடைகால ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை, August 28, 2011 அன்று Neilson Park இல் நடைபெறும்.)


Monday, June 27, 2011

ஆங்கிலதின போட்டி நிகழ்வுகள்

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் சென்ற வெள்ளிக்கிழமை அதாவது 24-06-2011 அன்று ஆங்கிலதின போட்டி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிலே மாணவர்கள் தங்களது ஆங்கில அறிவை தங்களது பேச்சு,நாடகங்கள் போன்றவை மூலம் வெளிப்படுத்தினர்.






Friday, June 24, 2011

Toronto வில் உதயமாகியது "யாழ்நகர் சூப்பர் மார்க்கெட்"


உசனைசேர்ந்த சிதம்பரப்பிள்ளை அவர்களின் மகள் தயாளினி உதயகுமார் அவர்களின்  முயற்சியில் "யாழ்நகர் சூப்பர் மார்க்கெட்" எனும் புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Scarborough வில் Midland and Ellesmere சந்திப்பில்
1239 Ellesmere Road ல் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இம் மளிகை கடையில் இலங்கை இந்திய மலிகைபொருட்கள் மற்றும் கனேடிய grocery
பொருட்கள் என அனைத்தும்.மிக மலிவு விலையில் கிடைக்கிறது .


Tuesday, June 21, 2011

கனேடிய முதலீட்டு வழிகாட்டி-திரு.ரமணன் ராமச்சந்திரன்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்றும் திரு.ரமணன் ராமச்சந்திரன் அவர்கள் நடைமுறை கனேடிய பொருளாதார நிதி நிலைமையை ஆராய்ந்து அதற்கு ஏற்றாபோல் எதிர்காலத்துக்கு ஏற்ற
முதலீட்டு வழிகளையும் அத்துடன் Real Estate சந்தை நிலவரங்களையும் துல்லியமாக அறிந்து. உங்கள் பணத்தை சரியான இடத்தில் முதலிட வழிசெய்கிறார். Condo முதலீடுகளில் இவர் கைதேர்ந்த அனுபவம் கொண்டதனால் உங்களுக்கு போதிய ஆலோசனையும் சரியான இடத்தையும் தெரிவு செய்து மிக குறுகிய காலத்தின் உங்கள் முதலீட்டு பணத்தை பலமடங்கு அதிகரிக்க வைக்கும் பக்குவம் தெரிந்தவர். Toronto GTA பகுதியில் வீடு விற்பனையில் பல்லினமக்கள் ஆதரவையும் பல விருதுகளையும் பெற்று முன்னணியில் திகழும்
திரு.ரமணன் உசன் மக்களுக்கு பல இலவச சேவைகளை வழங்க முன்வந்துள்ளார்.
உங்கள் வீடுகளை விற்பனை செய்வதாயின் ஒருமுறை அழைத்து பேசுங்கள் மிக கூடிய விலையில்,விரைவாக வீடுகளை
விற்கும் நுட்பங்களை வழங்குவதுடன் இலவச விலை மதிப்பும் செய்து தருவார். நீண்ட காலம் வீடு விற்பனையில் அனுபவம் கொண்டதனாலும்  பல்லின மக்களுடன் இணைந்து பணிபுரிவதாலும்  இவரிடம் இருக்கும் வீடுகள் விரைவாக 
விற்று தீர்ந்துவிடுகின்றன  உங்கள் இல்லங்களை எப்படி பெறுமதி அதிகரிக்க வைப்பது ? எவ்வாறு சந்தையில் கேள்வியை அதிரிப்பது போன்ற நுட்பங்களை சொல்லித்தருவார் அத்துடன் நீங்கள் எங்கும் பெறமுடியாத பல அரிய சலுகைகளை பெற்றுதருவதட்கும் அவை குறித்த ஆலோசனைகளுக்கும்.
இன்றே அழைத்து ஒருமுறை ரமணனுடன் பேசுங்கள். 416 670 6467
 
http://www.srilankacanada.com/sl_jan_11.php


சிவஸ்ரீ கேதீஸ்வரகுருக்கள் வழங்கிய சாந்திஉரை ஒலிவடிவில்

உசன் பண்டிதர் சி சரவணமுத்து அவர்களின் 31 நினைவு நாள் அன்று
உசனில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சிவஸ்ரீ கேதீஸ்வரகுருக்கள்
அவர்கள் வழங்கிய சாந்தி உரை ஒலிவடிவில்.


Sunday, June 19, 2011

உசன் கஜகேணி விநாயகர் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீட்டு விழா

உசன் கஜகேணி விநாயகர் ஆலைய கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீட்டு விழா இன்று அதாவது 19-06-2011 அன்று அவ் ஆலய முற்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் அவ் கும்பாபிஷேக சிறப்பு மலரின் முதல் பிரதியினை ஆலையத்தின் தர்மகர்த்தா பெறுக்கொண்டார்.






Saturday, June 18, 2011

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உடைஉதவி தேவை


அன்புடன் கனடா வாழ் உசன் மக்களுக்கு:

எமதுநாட்டில்நடந்த கொடூர யுத்தத்தில் தமது ஊரை இழந்து உறவுகளை, உடமைகளை, இழந்து அடைக்கலம் தேடி எமது உசன்கிராமத்தில் 14 குடும்பங்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் .வந்தோரை வாழவைத்த பரம்பரையும், செல்வ செழிப்பும் மிக்க ஊராக விளங்கிய எமது உசனுரில் அடைக்கலம் தேடியவர்களை அரவணைத்து அவர்களது வாழ்வாதாரத்தையும் அவர்களின் மனவேதினயையும் சற்றேனும் ஈடுசெய்ய வேண்டிய கடமை உசனுரில் பிறந்து வளர்ந்த ஒவோருவரது கடைமையாகும்.


DR ஐ.ஜெபனாமகணேசன்அவர்கள் ஆற்றியஉரையின் ஒலிவடிவம்

அமரர் பண்டிதர் சி.சரவணமுத்து அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலிநிகழ்வு கனடாவில் நடைபெற்றது. அவ்வேளை உசனில் இருந்து உசன் பொதுநூலகவாக உறுப்பினர்கள் அஞ்சலி உரை உசனில் இருந்து வழங்கியிருந்தனர். உசன் கிராமத்தின் அபிவிருத்தி பணியில் முன்னின்று உழைக்கும் வைத்தியர் திரு ஐ .ஜெபனாமகணேசன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்
















திருமு.க.சிவானந்தம் அவர்கள் ஆற்றியஉரையின் ஒலிவடிவம்


அமரர் பண்டிதர் சி.சரவணமுத்து அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி
நிகழ்வு கனடாவில் நடைபெற்றது. அவ்வேளை உசனில் இருந்து உசன் பொதுநூலகவாக உறுப்பினர்கள் அஞ்சலி உரை உசனில் இருந்து வழங்கியிருந்தனர்.
 உசன் கிராமத்தின் அபிவிருத்தி பணியில் முன்னின்று உழைக்கும்

திரு மு.க .சிவானந்தம் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்






Friday, June 17, 2011

31 ம்நாள் நினைவஞ்சலி

                 அமரர்.உசன்பண்டிதர் சி.சரவணமுத்து         அவர்களின்  31 ம் நாள் நினைவஞ்சலி
அமரர்.உசன்பண்டிதர் சி.சரவணமுத்து அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலியும் சமயசாந்தி கிரிகை நிகழ்வும் 18 ஜூன் 2011 அன்று கனடாவில் நடைபெறவுள்ளது.
அன்னாரின் ஆத்மசாந்தியடைய வேண்டி பிரார்த்தனை நிகழ்வும்
Warden and Denison சந்திப்பில் உள்ள J &J மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இவ் அஞ்சலி நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.

குடும்பத்தினர்


Tuesday, June 14, 2011

UK லண்டன் இல் உசன் உணர்வாளர்கள் தேவை



நாம் பிறந்த வளர்ந்த எமது உசன் கிராமத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் உழைக்கும் கனடாஒன்றியத்துக்கு பலம்சேர்க்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் ஆதரவு கிடைத்த போதிலும் உசன் மக்களும் உசனை உருவாக்கிய பல முயற்சியாளர்கள் உள்ள லண்டன் UK யில் இருந்து எமக்கோ அல்லது எமது உசன் அமைப்புகளுக்கோ எந்த விதமான பங்களிப்பும் கிடைக்காமை
மிகவும் வருத்ததிட்குரியது. இருப்பினும் தற்போது திரு.சிவராசா அவர்கள் எம்முடன் கைகோர்த்துள்ளார்.
அதைவிட DR கணேஷானந்தம் சரவணமுத்து அவர்கள் உசன் பொது நூலகத்திற்காக அரிய நூல்களை சேகரித்து வருகிறார் அவருடன் இணைந்து பணியாற்ற லண்டன் வாழ் உசன் உறவுகளின் உதவி தேவைப்படுகிறது. உங்கள் உசன் மேல் பற்றுள்ளவர்கள் எம்முடன் நீங்களாகவே தொடர்புகொண்டு உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டி நிக்கிறோம்.
தொடர்புகளுக்கு : aju @usan .ca அல்லது 0014168332120


கனடாவில் உசன் பொதுநூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிப்பு


                           
உசனில் உருவாக்கப்படும் பொது நூலகத்திற்காக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமானது புத்தகங்களை சேகரித்து வருகிறது. அந்த வகையில் ஒருசில உசன் பற்று கொண்ட உறவுகள் தாமாக முன்வந்து மிக பெறுமதி வாய்ந்த அரிய நூல்களை உசனுக்காக உவந்தளித்துள்ளனர்.
இருப்பினும் நீங்களும் உசனுக்கு மனமுவந்து வழங்கும் பொறுப்பு உள்ளது
எனவே உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் வேண்டி நிக்கிறோம்.


Sunday, June 12, 2011

செந்தூரன், சுவர்ணா மணவாழ்க்கை ... வாழ்த்துக்கள்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தொழில்நுட்ப நிர்வாகியும் உசன் திரு.திருமதி சிவானந்தன் (ஆனந்தன்) சாந்தினி தம்பதிகளின் ஏக புதல்வனுமான செல்வன் செந்தூரன் அவர்களுக்கும்.

கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். இன்று 12 ஜூன் 2011 அன்று கனடாவில்பெரியோர்களால் திருமண பதிவு  மிகவும்சிறப்பாகநடைபெற்றது.



Saturday, June 11, 2011

மிருசுவிலில் வீதி விபத்து, வடக்கு மிருசுவில் இளம் பெண் மரணம்


 ஏ9 பிரதான வீதியில் மிருசுவில் சந்திக்குச் சமீபமாக நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணமான குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.மிருசுவில் வடக்கைச் சேர்ந்த யசோதரன் கெங்காதேவி (வயது 25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

ஏ9 பிரதான வீதியால் மிருசுவில் வடக்கை நோக்கி பிரஸ்தாபப் பெண் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
எதிரே கல் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்படுகையிலேயே குறித்த இளம்பெண்ணுடன் மோதியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் மிருசுவில் வைத்தியசாலைக்கும்  மிருசுவில் சந்திக்கும் இடையில் நிகழ்ந்துள்ளது.
தலையில் படுகாயமடைந்த குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி
 வைக்கப்பட்டது
.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனச் சாரதியை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளம் பெண் யுத்தத்தில் ஒரு கண்ணை இழந்தவராவார். அத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருசுவில் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வீதி விபத்துக்கள் குறித்து உசன் ஐக்கியவாலிபர் சங்கம். ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் ஆகிய உறுப்பினர்கள் யாழ் போக்குவரத்து போலீசார் மற்றும் வீதி பெரும்தேருக்கள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
உசன் மிருசுவில் பகுதியில் வேக கட்டுப்பாடு ,மற்றும் வீதி ஒழுங்கை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



Monday, June 6, 2011

"வெற்றி நடை போடும் உசன் இணையத்தளம்"

கடந்த Feb 12, 2011 - May 29, 2011 வரையான 3 மாத காலப்பகுதியில் எமது உத்தியோகபூர்வ இணைய தளமான www. usan .ca ல் பெருமளவான நாடுகளில் இருந்து 75034 பக்கங்கள் பாவிக்கப்பட்டுள்ளன.இது எமது முயற்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பாக கருதுகிறோம். நாம் பல சிரமங்களுக்கும் எதிர் கருத்துகளுக்குமிடையில் மேற்கொள்ளும் முயற்சிக்கு நாம் எதிர்பார்க்காத நாடுகளில் இருந்து கூட எமது தளத்தை உசன் மக்கள் பயன்படுத்துவது. எமக்கு மிகவும் மகிழ்ச்சிதருகிறது.கடந்த 3 மாத காலப்பகுதியில்

கனடா -3237                                 ஸ்வீடன் - 26
இலங்கை -1105                          கட்டார் -29
   மலேசியா -11                   பின்லாந்து -36
இங்கிலாந்து -977                      சிங்கப்பூர் -114
சுவிஸ் -566                                  நோர்வே -116
பிரான்ஸ் - 502                             இந்தியா -122
அவுஸ்திரேலிய - 328              நெதர்லாந்த் - 20
டென்மார்க் - 292                        பிரேசில் -08
அமெரிக்க -269                           நியூசிலாந்து- 07
ஜெர்மனி -236                            சவூதிஅரேபியா -06
இத்தாலி -154                             கிரீஸ் -05
                                                        ஐக்கிய அரபு -05
                                                          ரஷ்யா -04


****** பதிவுசெய்யபடாத விண்கல இணைப்பு-41

ஆகிய முறையில் மக்கள் எமது தளத்தை பாவித்துள்ளனர். இதன் உத்தியோகபூர்வ பத்திரங்கள் Google நிறுவனத்தால் வழங்கபட்ட இணைப்பு கீழே உள்ளது அதில் ஒவ்வொரு நாட்டிலும் தொகுதி ரீதியாகவும் தரப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் கருத்துக்களை எமக்கு வழங்குவதன் மூலம் எமது ஊடக துறையினரை இன்னும் உற்சாக படுத்த முடியும் .
Google நிறுவனத்தின் பதிவை காண இங்கே அழுத்துங்கள்

It has been just over 3 months since usan.ca launched (February 12, 2011) and I would like to share some statistics on the reach the website has had in this short period.
It would not have been possible without support and help from the USAN committee, volunteers from Usan, Canada and other countries.

Click here for the statistics from February 12 to May 29th, 2011





Friday, June 3, 2011

"உசன் ஊடகத்தை" இலகுவாக்கும் முயற்சி



அண்மைக்காலமாக உசன் கிராமம் தொடர்பாக அனைத்துலக மக்களுக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வரும். எமது ஊடக துறையானது இன்னும் இலகுவாக செய்திகளை பரிமாறிக்கொள்ளும் முறையில் செயல்படுத்தவுள்ளது. எதிர் வரும் நாட்களில் உங்களுக்கு எமது தளத்தில் இருந்து வரும் Email ஒன்றில் SUBSCRIBE தொடர்பான தகவல் தரப்படும் அதனை அனுமதியுங்கள். அதனை தொடர்ந்து எமது தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள் உடனடியாக உங்கள் ஈமெயில் முகவரிக்கு வந்தடையும்.
உங்களுக்கும் உசன் செய்தியறிய ஆவலாக இருக்கிறதா? எங்களுடன் இணைந்து கொள்ள விரும்பினால் www.usan.ca எனும் தளத்தில் SUBSCRIBE என்னும் பகுதியில் உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.

அனைத்துலக உசன் மக்களும் தரும் உற்சாகமும் பங்களிப்புமே எமது ஊடக துறையை இன்னும் வலுவடைய வைக்கும் "அனைவரும் ஒரே குடிலில் கீழ் அணியாவோம்" .

ஊடக பிரிவு
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்-கனடா 



செந்தூரன்-சுகாசினி அவர்களின் திருமண வாழ்த்துக்கள்....

உசன் மிருசுவிலை சேர்ந்த திரு.திருமதி. க.செல்லத்துரை தம்பதிகளின் ஏகபுத்திரன் திருநிறைச் செல்வன் செந்தூரன் அவர்களும் பெருங்குளம் வீதி கல்வயல், சாவகச்சேரியை சேர்ந்த திரு.திருமதி. இ.கிருஷ்ணசாமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி திருநிறைச் செல்வி சுகாசினி அவர்களும் இன்று அதாவது 03-06-2011 அன்று திருமணபந்தத்தில் இணைகின்றனர்
அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.


அத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகளுடன் எமது ஸ்ரீ முருகன் விளையட்டு கழகத்தினர் படத்தில் நிற்பதை கணலாம்