அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 30, 2011

அமரர் "பண்டிதர்"அவர்களுக்கு உசன்மக்களின் அஞ்சலி நிகழ்வு

21.05.2011 அன்று சிவபதமடைந்த அமரர் பண்டித சி.சரவணமுத்து அவர்களுக்கு உசனில்  அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம்,உசன் பண்டிதர் சரவணமுத்து நூலக நிர்வாகம்,உசன் ஐக்கிய வாலிபர்சங்கம் ஆகியவைகளின் ஏற்பாட்டிலும் உசன் கனடாவாழ் மக்கள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடனும் அன்னரது திருவுருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி நிகழ்வும்,உசன்வாழ்  மக்களினால் நிகழ்த்தப்பட்டது .
உசனில் இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெரியோர்கள் என பலரும் கலந்து மலரஞ்சலி நிகழ்த்தினர் .அதனைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும் மற்றும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஆத்மா சாந்தி பிரார்தனையும் 28-05-2011 சனிக்கிழமை நடைபெற்றது. Dr .மாணிக்கம், திரு. .பேரம்பலம் திரு. கு.விமலதாஸ் , சரவணமுத்து பொதுநூலக காப்பாளர்Dr .ஜெபனாமகணேஷ், திரு. ஆனந்தன் கிராமசேவகர் திருமதி செல்வநாயகம்.பண்டிதர் சிவப்பிரகாசம் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தியிருந்தனரஅன்னாரின் இறுதி விருப்பமான உசன் பொது நூலகத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் நிறைவேற்றுவது என உறுதி கூறப்பட்டது.