அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, May 25, 2011

நெஞ்சை விட்டகலா நினைவலைகளுடன்


அன்னையின் மடியில்:-1924-11-08      ஆண்டவன் அடியில்:-2011-05-21



அமரர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்து
(ஒய்வு பெற்ற உசன் இராமநாதன் மகா வித்தியாலய பிரதி அதிபர்)

ஐயா!!! பண்டிதரே நூற்றாண்டு காலத்தில்- நீர்
ஆற்றிய சேவைகளை சொல்ல எமக்கு
ஆயுள் போதாதையா இனி நாங்கள் உங்களை-போன்ற
ஒருவரை பெறுவதற்கு ஒராயிரம் ஆண்டுகள் கூட
போதாதையா ஊருக்காய் நீர் ஆற்றிய சேவையினை-ஆற்ற
இனி யார்வருவார் இவ்வுலகில் இருப்பினும்
ஆண்டவன் படைப்பில் ஆக்கலும் அளித்தலும் நியதி-தானே
இதற்கு யார்தான் விதிவிலக்கு கல்வியை கற்றுதந்தீர்
ஊருக்கோர் நூலகம் தந்தீர் ஆனால் இனி எமக்கு-யார்
தருவார் உங்களை சிட்டுக்குருவியாய் திரிந்த நாம்
இப்பொழுது சிற்கொடிந்த குருவியாய் அலைகிறோம்-எமக்கு
இப்பொழுது தயவு சொல்ல யார் வருவார் தரணியில்!!!!!



அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல உசன் கந்தனின் பாதங்களை பணிவதுடன் அன்னாரின் ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிநிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

விழி நீர் சொரிய.........................

உசன் பண்டிதர் சரவணமுத்து நூலக நிர்வாகம்.
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம்.
உசன் ஐக்கிய வாலிபர் சங்கம்.