அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 23, 2011

கண்ணீர் அஞ்சலி

                              பண்டிதர் சி.சரவணமுத்து
        {உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் உபஅதிபர்}
                 மண்ணில்:08.11.1924                               விண்ணில்: 21.05.2011
                                 பாரினில் வாழ்ந்த பண்டிதரே .......
                                 பரிவுடன் எம்மை வளர்த்தீரே
                                 உசனுக்கோர் "நாவண்ணர்"
                                 குணத்திற்கோர் உத்தமராய்
                                 தமிழுக்கோர் வித்துவானாய்
                                 தரணியிலே உயர்ந்தீரே!!
                                 முத்தமிழும் முழுதாக
                                 முருகனிடம் கற்றீரோ!!!!
                                 உசனூரை வளர்ப்பதற்காய்
                                 உரிமையுடன் உழைத்தவரே!!!!
                                 காலன் கவர்வான் என்றா  கனடா
                                 வந்தீர்கள்????
                                 பண்டிதரைக் காணாமல்
                                 பாரினிலே  தவிக்கின்றோம்.
                                 போகும் முன் உசனுக்காய்
                                 பொது நூலகம் தந்தவரே!!!!
                                 எம் மனதில் உம் நினைவு
                                 என்றும் நிலைத்திருக்கும்............

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திப்பதுடன்
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

              "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
                             மாண்டார் வருவாரோ மாநிலத்தே".......

 உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்
உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள்
             கனடா