அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, May 22, 2011

பண்டிதர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்களின் மரண அறிவித்தல்


விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவரும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற உப அதிபருமான பண்டிதர்,வித்துவான்,சைவப்புலவர், நாவண்ணர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் May மாதம் 21 ம் திகதி சனிக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி-வாலைப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரரும், காலம் சென்ற தம்பையா-சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், உசன் சின்னதங்கத்தின்(பண்டிதர் அம்மா) ஆருயிர் கணவரும் சரோஜினிதேவி (Pharmcist) கனடா, Dr. கணேசானந்தம் (London UK), சுசிலாதேவி (Civil Engineer - Prime Engineering, America) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராமநாதன்(Foreign Ministry, Sri Lanka ), Dr .தமயந்தி (London, UK), சுகுணேஸ்வரன் (Civil Engineer - Prime Engineering, America) ஆகியோரின் பரிவான மாமனாரும், சஞ்சீவ், கஜாளினி, றஜீவ், ஜிகான், டிலான், ஆர்த்தி, அர்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும், Vin மகாலிங்கம் அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் May மாதம் 26 ஆம் திகதி வியாழக் கிழமையும், 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமையும் மாலை 5 மணி முதல் 9 மணிவரை Warden & Sheppard சந்திக்கு அருகாமையில் உள்ள Highland Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு அதேமண்டபத்தில் ஈமைகிரிகைகள் நடைபெற்று மதியம் 12 மணிக்கு Kingston & Woodbine சந்திக்கு அருகாமையில் 256 Kingston Rd. ல் அமைந்துள்ள St. Johns Norway மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: மகள் சறோஜினி இராமநாதன் (கனடா) ௦௦0014162996763
மகள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் (அமெரிக்கா) 0016145285008
கணேசானந்தம் தமயந்தி (London, UK) 00441792895142