அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, May 15, 2011

உசனுகாய் தமது சொத்தை உவந்தளித்த உத்தமர்கள்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் முயற்சியில். உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்தின் ஆதரவுடன். நடைபெறும் அபிவிருத்தி பணிகளின் அடுத்த முயற்சியில். அமைந்தது ஒரு முக்கிய திருப்பம்.
உசனில் நாம் அமைக்க எண்ணிய பொது நூலகத்திட்க்கு. தமது பூர்வீக சொத்தான வீட்டை வாரி வழங்க முன்வந்தனர். உசன் பண்டிதர். திரு திருமதி.சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்கள்.

வீட்டை உவந்தளித்த உவகையில் உரிமையாளர்களும் ஒன்றிய நிர்வாகிகளும்  
அவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று பல மாதம் எமது சங்கம் சட்ட வரைமுறைகளை ஆராய்ந்து. எதிர்கால நடைமுறைகளை கருத்தில் எடுத்து எமது உசன் அபிவிருத்தி கட்டமைப்புடனும் கலந்தாலோசித்து. நடவடிக்கைகளின் ஈடுபட்டோம்.

வீட்டு உரிமையாளர்களான திரு.திருமதி.சுகுநேஸ்வரன் சுசீலாதேவி அவர்களின் பூரண ஆதரவுடனும் அவர்களின் உற்சாகத்துடனும் இன்றைய தினம் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் வைத்து
 அவர்களின் வீடு சட்டரீதியாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
கனடாவிலிருந்து அமெரிக்கா சென்று ஒன்றிய நிர்வாகிகள் இந்த வீட்டை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஆவணங்கள் உரிமையாளர்களால் கையளிக்கபடுகிறது
 உசனில் இயங்க இருக்கும் பொது நூலகத்திற்காக தமது வீட்டை வழங்கும் ஒப்பந்தத்தில்
கனடா மக்கள் ஒன்றிய நிர்வாகிகளும் உரிமையாளர்களும் சட்டமுறையில்
கைச்சத்திடனர். இன் நிகழ்வில் கலந்து கொள்ள கனடா ஒன்றியத்தின்
தலைவர் திரு.நகுலன் கனகசபை செயலாளர் திரு.பாஸ்கரன் சுப்பிரமணியம் பொருளாளர் திரு.அஜந்தன் வெற்றிவேலு சங்க அங்கத்தவர் திரு.பிரபா வெற்றிவேலு ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்தினர். இந்த முயற்சியில் முன்னின்று உழைத்த திரு.ராஜலிங்கம் நல்லதம்பி அவர்களுக்கு நன்றிகள்.

ஒப்பந்தங்கள் பரிமாறப்படுகிறது