21.05.2011 அன்று சிவபதமடைந்த அமரர் பண்டித சி.சரவணமுத்து அவர்களுக்கு உசனில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம்,உசன் பண்டிதர் சரவணமுத்து நூலக நிர்வாகம்,உசன் ஐக்கிய வாலிபர்சங்கம் ஆகியவைகளின் ஏற்பாட்டிலும் உசன் கனடாவாழ் மக்கள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடனும் அன்னரது திருவுருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி நிகழ்வும்,உசன்வாழ் மக்களினால் நிகழ்த்தப்பட்டது .
Monday, May 30, 2011
Sunday, May 29, 2011
Website Statistics - Feb 12, 2011 - May 29, 2011
It has been just over 3 months since usan.ca launched (February 12, 2011) and I would like to share some statistics on the reach the website has had in this short period.
It would not have been possible without support and help from the USAN committee, volunteers from Usan, Canada and other countries. Click here for the statistics from February 12 to May 29th, 2011 - Senthuran |
Senthuran S
|
|
Friday, May 27, 2011
Thursday, May 26, 2011
Wednesday, May 25, 2011
நெஞ்சை விட்டகலா நினைவலைகளுடன்
அன்னையின் மடியில்:-1924-11-08 ஆண்டவன் அடியில்:-2011-05-21
அமரர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்து
(ஒய்வு பெற்ற உசன் இராமநாதன் மகா வித்தியாலய பிரதி அதிபர்)
ஐயா!!! பண்டிதரே நூற்றாண்டு காலத்தில்- நீர்
ஆற்றிய சேவைகளை சொல்ல எமக்கு
ஆயுள் போதாதையா இனி நாங்கள் உங்களை-போன்ற
ஒருவரை பெறுவதற்கு ஒராயிரம் ஆண்டுகள் கூட
போதாதையா ஊருக்காய் நீர் ஆற்றிய சேவையினை-ஆற்ற
இனி யார்வருவார் இவ்வுலகில் இருப்பினும்
ஆண்டவன் படைப்பில் ஆக்கலும் அளித்தலும் நியதி-தானே
இதற்கு யார்தான் விதிவிலக்கு கல்வியை கற்றுதந்தீர்
ஊருக்கோர் நூலகம் தந்தீர் ஆனால் இனி எமக்கு-யார்
தருவார் உங்களை சிட்டுக்குருவியாய் திரிந்த நாம்
இப்பொழுது சிற்கொடிந்த குருவியாய் அலைகிறோம்-எமக்கு
இப்பொழுது தயவு சொல்ல யார் வருவார் தரணியில்!!!!!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல உசன் கந்தனின் பாதங்களை பணிவதுடன் அன்னாரின் ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிநிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
விழி நீர் சொரிய.........................
உசன் பண்டிதர் சரவணமுத்து நூலக நிர்வாகம்.
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம்.
உசன் ஐக்கிய வாலிபர் சங்கம்.
sanjayan usan
|
|
Tuesday, May 24, 2011
பண்டிதர் ஐயாவுக்கு இரங்கல் செய்தி
பண்டிதர் ஐயாவின் இறுதி நிகழ்வின்போது உங்களின் இரங்கல் செய்தியும் இடம்பெறவேண்டுமென நீங்கள் விரும்பினால், அந்தச் செய்தியை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
If your condolence message for Pandithar Aiyaa to be read during the viewing, please email the message to secretary@usan.ca.
If your condolence message for Pandithar Aiyaa to be read during the viewing, please email the message to secretary@usan.ca.
Baskaran
|
|
Monday, May 23, 2011
கண்ணீர் அஞ்சலி
பண்டிதர் சி.சரவணமுத்து
{உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் உபஅதிபர்}
பரிவுடன் எம்மை வளர்த்தீரே
தமிழுக்கோர் வித்துவானாய்
தரணியிலே உயர்ந்தீரே!!
முத்தமிழும் முழுதாக
முருகனிடம் கற்றீரோ!!!!
உசனூரை வளர்ப்பதற்காய்
உரிமையுடன் உழைத்தவரே!!!!
காலன் கவர்வான் என்றா கனடா
வந்தீர்கள்????
பண்டிதரைக் காணாமல்
பாரினிலே தவிக்கின்றோம்.
போகும் முன் உசனுக்காய்
பொது நூலகம் தந்தவரே!!!!
எம் மனதில் உம் நினைவு
என்றும் நிலைத்திருக்கும்............
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திப்பதுடன்
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத்தே".......
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்
உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள்
கனடா
{உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் உபஅதிபர்}
மண்ணில்:08.11.1924 விண்ணில்: 21.05.2011
பாரினில் வாழ்ந்த பண்டிதரே .......பரிவுடன் எம்மை வளர்த்தீரே
உசனுக்கோர் "நாவண்ணர்"
குணத்திற்கோர் உத்தமராய் தமிழுக்கோர் வித்துவானாய்
தரணியிலே உயர்ந்தீரே!!
முத்தமிழும் முழுதாக
முருகனிடம் கற்றீரோ!!!!
உசனூரை வளர்ப்பதற்காய்
உரிமையுடன் உழைத்தவரே!!!!
காலன் கவர்வான் என்றா கனடா
வந்தீர்கள்????
பண்டிதரைக் காணாமல்
பாரினிலே தவிக்கின்றோம்.
போகும் முன் உசனுக்காய்
பொது நூலகம் தந்தவரே!!!!
எம் மனதில் உம் நினைவு
என்றும் நிலைத்திருக்கும்............
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திப்பதுடன்
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத்தே".......
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்
உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள்
கனடா
Anonymous
|
|
Sunday, May 22, 2011
பண்டிதர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்களின் மரண அறிவித்தல்
விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவரும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற உப அதிபருமான பண்டிதர்,வித்துவான்,சைவப்புலவர், நாவண்ணர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் May மாதம் 21 ம் திகதி சனிக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி-வாலைப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரரும், காலம் சென்ற தம்பையா-சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், உசன் சின்னதங்கத்தின்(பண்டிதர் அம்மா) ஆருயிர் கணவரும் சரோஜினிதேவி (Pharmcist) கனடா, Dr. கணேசானந்தம் (London UK), சுசிலாதேவி (Civil Engineer - Prime Engineering, America) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராமநாதன்(Foreign Ministry, Sri Lanka ), Dr .தமயந்தி (London, UK), சுகுணேஸ்வரன் (Civil Engineer - Prime Engineering, America) ஆகியோரின் பரிவான மாமனாரும், சஞ்சீவ், கஜாளினி, றஜீவ், ஜிகான், டிலான், ஆர்த்தி, அர்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும், Vin மகாலிங்கம் அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் May மாதம் 26 ஆம் திகதி வியாழக் கிழமையும், 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமையும் மாலை 5 மணி முதல் 9 மணிவரை Warden & Sheppard சந்திக்கு அருகாமையில் உள்ள Highland Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு அதேமண்டபத்தில் ஈமைகிரிகைகள் நடைபெற்று மதியம் 12 மணிக்கு Kingston & Woodbine சந்திக்கு அருகாமையில் 256 Kingston Rd. ல் அமைந்துள்ள St. Johns Norway மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: மகள் சறோஜினி இராமநாதன் (கனடா) ௦௦0014162996763
மகள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் (அமெரிக்கா) 0016145285008
கணேசானந்தம் தமயந்தி (London, UK) 00441792895142
Anonymous
|
|
Saturday, May 21, 2011
"நாவண்ணர்" பண்டிதர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
பண்டிதர் ஐயா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய தமிழ் வித்துவான் "நாவண்ணர்" பண்டிதர் சின்னத்தம்பி சரவணமுத்து அவர்கள் சற்று நேரத்துக்கு முன் கனடாவில் முருகனடி சேர்ந்தார்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
Anonymous
|
|
Tuesday, May 17, 2011
உசனில் உதயமாகிறது -"பண்டிதர்" சரவணமுத்து பொது நூலகம்-
கனடாஒன்றியத்தினால் பொறுப்பேற்கபட்ட கட்டிடத்தின் ஆவணங்கள் உசனை சென்றடைந்ததை தொடர்ந்து
உசன் முருகனின் தீர்த்த திருவிழா நிறைவு பெற்றவுடன் . ஆறுமுகசுவாமி வாசலில் நூலகத்துக்கான கூட்டமானது இன்று (17.05.2011 ) வைத்தியர் ஐ.ஜெபநாமகணேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலில் வீட்டு உரிமையாளர்கள் உவந்தளித்த ஆவணங்கள் அனைவருக்கும் வாசித்து காட்டப்பட்டது .
sanjayan usan
|
|
உசன் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியிறக்க வைபவம்
உசன் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுத்தி நாள் திருவிழாவான கொடியிறக்க வைபவம் இன்று அதாவது 17.05.2011 அன்று இனிதே நடைபெற்றது
sanjayan usan
|
|
உசன் வெளிநாட்டு வாழ் மக்களே
உசன் வெளிநாட்டு வாழ் மக்களே உசன் வாலிபர்களால் முன்னெடுக்கப்படும் பூங்காவனத்திருவிழாவின் இரவு நிகழ்ச்சிகளை இம்முறை மிகவும் வெகு விமர்சையாக செய்ய உள்ளோம் இதற்கு அன்பார்ந்த உசன் வெளிநாட்டு வாழ் மக்களே உங்களிடமிருந்து நாம் நிதி உதவியினை நாடி நிக்கிறோம் அவ்வாறு நிதி உதவி செய்ய விரும்பிய அன்பர்கள் எமது வாலிபர்சங்க செயளாலரான அ.பிரபாகரன் தொலைபேசி இல:-0776578032 மூலம் தொடர்புகொண்டு உங்களது நிதி உதவியினை செய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்
sanjayan usan
|
|
Monday, May 16, 2011
உசன் கந்தசுவாமி ஆலயத்தின் 9ஆம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழாவில்
உசன் கந்தசுவாமி ஆலயத்தின் 9ஆம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழாவில் எம்பெருமான் முருகப்பெருமான் சிங்காசனத்தில் தேருக்கு எழுந்தருழுவதையும்
முருகப்பெருமான் வீற்றிருக்கும் தேரினை முருகப்பெருமான் பக்த அடியார்கள் இழுப்பதையும்
தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட பக்த அடியார்களையும், தனது நேர்த்தியை நிவர்த்தி செய்யும் முகாமாக பக்த அடியார் முருகப்பெருமானை வேண்டி தூக்கு காவடி எடுப்பதையும் படத்தில் காணலாம்
முருகப்பெருமான் வீற்றிருக்கும் தேரினை முருகப்பெருமான் பக்த அடியார்கள் இழுப்பதையும்
தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட பக்த அடியார்களையும், தனது நேர்த்தியை நிவர்த்தி செய்யும் முகாமாக பக்த அடியார் முருகப்பெருமானை வேண்டி தூக்கு காவடி எடுப்பதையும் படத்தில் காணலாம்
sanjayan usan
|
|
உசன் கந்தசுவாமி ஆலயத்தின் 8ஆம் நாள் திருவிழாவான சப்பற திருவிழாவில்........
உசன் கந்தசுவாமி ஆலயத்தின் 8ஆம் நாள் திருவிழாவான சப்பற திருவிழாவில் எல்லாம் வல்ல எம்பெருமான் சப்பறத்திலே வெளிவீதியுலா வந்து அனைத்து வாழ மக்களுக்கும் அருளாட்சி புரிவதை காணலாம்
sanjayan usan
|
|
Sunday, May 15, 2011
Saturday, May 14, 2011
Friday, May 13, 2011
பிறந்ததின வாழ்த்துக்கள்
உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி. நடேசலிங்கம்.சோபனா தம்பதிகளின் புதல்வன் கரிகரன் நாளை அதாவது 13-05-2011 இன்று தனது ஆறாவது பிறந்த நாளை உசனில் அமைந்திருக்கும் தனது வீட்டில் கொண்டாடுகிறர்.செல்வன் கரிகரன் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் திருவருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தினர் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா சார்பாகவும், அனைத்துலக உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.
sanjayan usan
|
|
Tuesday, May 10, 2011
Sunday, May 8, 2011
2 ம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி: ஆறுமுகம் செல்லாச்சி அவர்களின் 2 ம்ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு :06 -01 -1922 மறைவு :10 -05 -2009
உசனை சேர்ந்த திருமதி ஆறுமுகம் செல்லாச்சி அவர்களின் 2 ம் ஆண்டு
நினவு நாளில் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் .
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத்தே ............. "
குடும்பத்தினர்
பிறப்பு :06 -01 -1922 மறைவு :10 -05 -2009
உசனை சேர்ந்த திருமதி ஆறுமுகம் செல்லாச்சி அவர்களின் 2 ம் ஆண்டு
நினவு நாளில் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் .
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத்தே ............. "
குடும்பத்தினர்
Anonymous
|
|
உசன் முருகன் திருவிழா நேரடி ஒளிபரப்பு
உசன் கந்தசுவாமி கோவிலில் இன்று ஆரம்பமாகியுள்ள திருவிழாவின்
நேரடி ஒளிபரப்புகளை தொடரும் 10 நாட்களும் காணமுடியும்.
நேரடி ஒளிபரப்புக்கு இங்கே அழுத்தவும்
http://www.ussanjaffna.com/
Anonymous
|
|
Saturday, May 7, 2011
உசன் கந்த சுவாமி ஆலைய மகோற்சவ விஞ்ஞாபனம் 2011
முருகப்பெருமான் அடியார்களே எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் திருவருளால் நிகழும் கர வருடம் சித்திரை 25-ம் நாள் (08-05-2011) ஞாயிற்றுக்கிழமை பகல் 10-00 மணிக்கு கொடியேற்ற வைபவத்துடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது.
அதே போன்று 16.05.2011 தேர் உற்சவமானது நடை பெறும் அன்று முருகப்பெருமான் காலை 10.30 மணிக்கு தேருக்கு எழுந்தருளல் வைபவம் இடம்பெறும்.
தீர்த்த உற்சவம் 17.05.2011 அன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிக்கு கொடியிறக்க வைபவம் நடைபெறும் என்பதனை எல்லாம் வல்ல முருகப்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அத்துடன் திருவிழா காலங்களில்க் காலை 10-00 மணிக்கு திருவிழா பூஜை ஆரம்பமாகி காலை 11.00 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும் அதே போன்று மாலை 7.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி இரவு 8.00 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும்
தீர்த்த உற்சவம் 17.05.2011 அன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிக்கு கொடியிறக்க வைபவம் நடைபெறும் என்பதனை எல்லாம் வல்ல முருகப்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
sanjayan usan
|
|
Thursday, May 5, 2011
புதுக்குளம் கண்ணகை அம்பாள் வரலாறு
உசன் கிராம மக்களுக்கு சக்தியாக விளங்கும் கண்ணகை அம்பாள் ஆலயம் உசன்,விடத்தற்பளை,கரம்பகம், ஆகிய முன்று கிராமங்களுக்கும் மத்தியில் அமைந்து எல்லா மக்களுக்கும் அருள் பாலித்துக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. புதுக்குளத்து கண்ணகை அம்பாளுக்கு மூன்று கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தவறாது பூசைகள் செய்து வருகிறார்கள். அம்பாள் ஆலயம் செங்கல்லால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடமாக இருந்தது. ஆலயத்தை புதுப்பிக்க வேண்டிய நிலையைக் கருத்திற்கொண்டு உலகெங்கும் வாழும் உசன் மக்கள் ஒன்று சேர்ந்து நிதி சேகரித்து டாக்டர் மாணிக்கம் ஐயா அவர்களின் மேற்பார்வையில் அம்பாள் ஆலயம் 1999ம் ஆண்டளவில் பொளிகல்லால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
Senthuran S
|
|
Subscribe to:
Posts (Atom)