உசன் ஸ்ரீ வீரபத்திரர் ஆலய பெரும்பூசை திருவிழா April 8 ம் திகதி வெள்ளிகிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. உசனூரின் குல தெய்வமாக அருள்பாலிக்கும் எம்பெருமானின் இந்தப் பூசை வழிபாட்டினை நேரடியாக கண்டு அருள் பெறும் முகமாக வீடியோ மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யும் முயற்சியில் உசன் வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறப்புத் தொழில் நுட்ப முறையைப் பயன்படுத்தி இந்த ஒளிபரப்பைச் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இலங்கை நேரம் காலை 8:30 மணிமுதல் உசன் மக்களின் இணையத் தளமான www.usan.ca ல் நீங்கள் பார்த்து அருள் பெறலாம்.
இவ் நேரடி ஒளிபரப்புக்கு அனுசரணை வழங்கும் உசன் திரு.சின்னதுரை அவர்களின் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்.