அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, April 6, 2011

உசன் ஸ்ரீ வீரபத்திரர் ஆலய மணவாளகோல திருவிழா

உசன் ஊரில் குல தெய்வமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரபத்திரபெருமானின் வருடாந்த மணவாள கோல பெரும்பூசை திருவிழா ஏப்ரல்8 ம் திகதி வெள்ளிகிழமை. மிகசிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது.

வருடந்தோறும் பங்குனி மாதத்தில் வரும் இத்திருவிழா உசனூர் மக்களால் ஒன்றிணைத்து மிக சிறப்பாக நடைபெறுவது வழமை அண்மைய காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால். இடம் பெயர்ந்த உசன் மக்கள் மீண்டும் ஒன்றுகூடி இம்முறை சிறப்பான அபிஷேக ஆராதனைகளுடன்  நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகள் துரித கதியில்  உசன் மக்களும் வாலிபர்களும் செய்து வருகின்றனர் இடம் பெயர்ந்து வெளியூர் சென்ற உசன்மக்களும், சில நாட்களாக மீண்டும் உசனுக்கு வருகை தந்துள்ளனர் . இம்முறை அதிகளவான மக்கள் வீரபத்திரர் கோவில் பூசையில் கலந்துகொள்ளவுள்ளனர்.  இவ் விழா சிறப்பாக நடைபெற்று உசன்வீரபத்திரர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.