உசனில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும்.
மனித-பண-அறிவியல் வளங்களை ஒரே அமைப்பின் ஊடாக உசனுக்கு
வழங்குவது தொடர்பில் இருந்து வரும் கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் நிர்வாகசபை கூடி ஆலோசித்தது.
கடந்த பெப்ருவரி மாதம் 13 ம் திகதி விசேட மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத்தின் தலைவர் திரு கனகசபை நகுலன் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில். இம்முறை அங்கத்தவர்கள் சிலர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கும் விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இவ்வாறான தடைகளினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து தலைவர் முழு விளக்கத்தினையும் வழங்கினார்.
அத்துடன் புதிய நிர்வாகசபை உறுப்பினராக திரு.வி.கருணி அவர்கள்
முழு ஆதரவுடன் இணைந்து கொண்டார்.