அனைத்துலகிலும் வாழும் உசன் மக்களை ஒருஅமைப்பின் கீழ் அரவணைத்து எமது உசன் கிராமத்தை புத்துயிர் பெறவைக்கும் முயற்சியில் கனடா மக்கள் ஒன்றியம் ஈடுபட்டு வருகிறது.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்ப்படுமிடத்தில் இன்னும் பல
அபிவிருத்தி திட்டங்களை உசனில் நிறைவேற்ற முடியும். அந்த வகையில்
உசன் மக்கள் பரந்து வாழும் நாடுகளில் நாம் எமது நிர்வாக
இணைப்பாளர்களை நியமித்து வருகிறோம். அவர்கள் மூலம் எமது
தொடர்புகளையும் தேவைகளையும் இலகுவாக நிவர்த்திசெய்ய முடியும்
அதன் ஒருகட்டமாக Australia நாட்டில்
திரு. கந்தசாமி வைரவப்பிள்ளை அவர்களும்.(Sydney )
திரு.இராகவன் இராஜமோகன் அவர்களும் (Melburn ) எமது உத்தியோக பூர்வ இணைபாளர்களாக செயல்பட முன்வந்துள்ளனர். இவர்களுக்கு
எமது வாழ்த்துகளையும் நன்றிகளையும். தெரிவித்து
கொள்வதுடன் Australia வாழ் உசன் மக்கள் உங்கள் முழு பங்களிப்பையும்
இவர்களுக்கு வழங்கி எமது உசன் கிராம அபிவிருத்திக்கு உங்கள் வரலாற்று
கடமையை செய்யுமாறு வேண்டி நிற்கிறோம்.