யாழ்ப்பாணத்து தென்மராட்சி பிரிவில் உசன் பகுதியில் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ கஜகேணி விநாயகப்பெருமான் ஆலயமானது சில திருத்த வேலைகள் செய்யப்பட்டு அவ் வேலைகள் முடிவடைந்து தற்பொழுது மஹா கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகின்றது. விநாயகர் அடியார்களே மகோற்சவ நிகழ்வுகள் வருமாறு:-
21-03-2011 திங்கட்கிழமை பங்குனிமாதம் 7ம் நாள்-கர்மாரம்பம்
22-03-2011 செவ்வாய்க்கிழமை பங்குனிமாதம் 8ம் நாள் காலை 10.00 மணிமுதல் புதன்கிழமை பகல் 11.00 மணிவரை எண்ணெய்க்காப்பு இடம்பெறும்
24-03-2011 வியாழக்கிழமை பங்குனிமாதம் 10ம் நாள் காலை 9.26-11.00 மணிவரை அனுஷ நட்சத்திரமும், இடப லக்கினமும்,சித்த யோகமும் கூடிய சுப முகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகமும் இடம்பெறும்.
இப்புண்ணிய காலங்களில் அடியார்கள் வருகை தந்து நடைபெற உள்ள கிரியைகளைத் தரிசித்து எல்லாம்வல்ல விநாயகப்பெருமானின் திருவருளினைப் பெற்று உய்திபெறுவீராக.