அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, March 18, 2011

"தாய்மடி தேடி" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா


உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியும் திரு.திருமதி குலநாயகம்(தபால் உழியர்) அவர்களின் மகளுமான திருமதி.கார்த்திகாஜினி சுபேஸ் அவர்களினால். உருவாக்கப்பட்ட "தாய்மடி தேடி" எனும் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு சங்கரப்பிள்ளை தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் கடந்த 6 ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


டாக்டர் எம்.கே.முருகானந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்வில் அ.சுபேஸின்(ஆர்த்திகன்) வரவேற்புரையினைத் தொடர்ந்து, . நூல் வெளியீட்டு உரையினை மூத்த எழுத்தாளார் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி. சாமி வெளியிட்டு வைக்க கே.எம்.தர்மராஜா(பிரசித்த நொத்தரிஸ்,சட்ட உதவியாளர்) பெற்றுக் கொண்டார்.


மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜுவா, தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர். தி.ஞானசேகரன் மற்றும் திருமதி.புஸ்பராணி நவரட்ணம்(உசன் ராமநாதன் மஹா வித்தியாலய ஆசிரியர் )ஆகியோர் வாழ்த்துரையினை நிகழ்த்தினர்.

ஆசிரியர்.திருமதி.ந.புஸ்பராணி (உசன் இராமநாதன் ம.வி)
திருமதி.தேவகௌரி சுரேந்திரன்(விரிவுரையாளர் ஊடகவியல் கல்லூரி) மு.தயாபரன்(எழுத்தாளர்) ஆகியோர் ஆய்வுரையினையும் நிகழ்த்தினர்.
 தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் கல்விமான்கள் என பெருமளவு மக்கள்
இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
திருமதி கர்திகாஜினி தினக்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றி வருகிறார்.


மிகவு தரமான முறையில் உருப்பெற்ற இந்த தாய்மடி தேடி எனும் நூல் உலகத்து வாழ் அனைத்து தமிழ் மக்களின் கைகளிலும் சென்றடைய வேண்டும். உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவியின் இம்முயற்சிக்கு அனைத்துலக வாழ் உசன் மக்களும் உசன் இராமநாதான் மகாவித்தியாலய மாணவர்களும் பெருமை கொள்வதுடன் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.



 மேலதிகபடங்கள்:http://www.facebook.com/home.php#!/album.php?fbid=178628845515987&id=100001066182951&aid=41930&closeTheater=1