அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, March 27, 2011

"தங்கப்பதக்கம்" வென்றுள்ள உசன் வர்ஷன்



உசனை சேர்ந்த நகுலன் - சகிலா தம்பதிகளின் புதல்வன் வர்ஷன் சற்று முன்னர் யோர்க் பல்கலை கழகத்தில் (Toronto, Canada) நடந்த கராத்தே பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். வர்சனின் இந்த சாதனைக்கு எமது வாழ்த்துக்கள். தொடர்ந்து பல வெற்றிகள் பெற்று சாதனை படைக்க உசன் முருகன் அருள் புரிய வேண்டுகிறோம்.


"வர்ஷனுக்கு" வாழ்த்துக்கள்


உசனை சேர்ந்த நகுலன் சகிலா தம்பதிகளின் புதல்வன் வர்ஷன் கனடாவில் கராத்தே நெறியில் Brown பட்டிதரத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.
டொரோண்டோ யோர்க் பல்கலை கழகத்தில் இன்று நடைபெறும் கராத்தே 
 பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிலும் இவர் பங்கு பற்றும் தகுதி பெற்றுள்ளார் 
தனது 4 வது வயதில் கராத்தே பயிட்சியை நோர்தேன் கராத்தே கல்லூரியில் முறையாக பயின்று வரும் வர்ஷன் பல போட்டிகளில் வெற்றி ஈடியதுடன் பரிசில்களும் பெற்றுள்ளார். மிக சிறு வயதில் வர்ஷன் Brown பட்டிதரத்திற்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இன்று  நடைபெறும்  போட்டியிலும் வெற்றி பெற்று இன்னும் முன்னேறி உசனுருக்கு பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள்.





திரு. வைரவப்பிள்ளை கந்தசாமி in Toronto

திரு. வைரவப்பிள்ளை கந்தசாமி அவர்கள் Australia இல்  இருந்து  இங்கு  வந்துள்ளார்.   இரண்டொரு  நாட்களே  அவர் இங்கு தங்கி நிற்க உள்ளார்.  அவர் உங்களைச் சந்திக்க விரும்புகின்றார்.  இதற்கான  ஒழுங்கு   செய்யப்பட்டுள்ளது.

முகவரி: 17 Trefoil Court, Scarborough  M1X 1X7.
திகதி: March 27, 2011
நேரம்: 6 p.m.

உங்களுக்கு அவரைச் சந்திக்க விருப்பம் உண்டானால், நாளை அங்கு சந்திக்கலாம்.


Mr. Vairavapillai Kanthasamy currently lives in Australia is here now.  He is here on a very short trip and would like to meet many of you.  A gathering has been planned to meet him.

Address: 17 Trefoil Court, Scarborough  M1X 1X7.
Date: March 27, 2011
Time: 6 p.m.

If you know him and like to meet him, see you there.



Friday, March 25, 2011

கஜகேணிப் பிள்ளையார் கோவில் வரலாறு


திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் 
உருவாக்கும் ஆதலால் வானோர்
ஆனைமுகத்தானை காதலால் கூப்புவர் தம்கை.

தென்னஞ் சோலைகளும், முக்கனி மரங்களும் விளை நிலங்களும் நிறைந்து இயற்கை வனப்புடன் காட்சி தரும் உசன் கிராமம் தென்மராட்சியில் அமைந்துள்ளது.  ஆன்மீக நெறியும் தெய்வ வழிபாடும் தழைத்து ஓங்க ஆலயங்களும், அறிவுக் கலையும் அதன் பயன்பாடும் பரந்து பட பணியாற்றும் வித்தியாலயங்களும் அமையப் பெற்றது உசன் கிராமம்.  இவ்வாலயங்களும் வித்தியாலயங்களும் வெவ்வேறு சரித்திரங்களுடனேயே தோன்றின என்பது வரலாறு.



Tuesday, March 22, 2011

கஜகேணி பிள்ளையார் கோவில் நேரடி ஒளிபரப்பு



உசன் ஸ்ரீ கஜகேணி பிள்ளையார் கோவிலில் நடைபெறும் மஹா கும்பாபிஷேக நிகழ்வை நேரடி காட்சியாக ஒளிபரப்பும் எமது முயற்சி ஓரளவு நிறைவடைந்துள்ளது. இலங்கை நேரம் 23 ம் திகதி காலை 10 மணிக்கு ஒளிபரப்பு ஆரம்பமாகும்.
அதேபோன்று மறுநாள் 24 திகதி கும்பாபிஷேக நிகழ்வும் அதேநேரம் ஒளிபரப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.
மிகவும் குறைந்த அலைவரிசையில் நடைபெறும் இம் முயற்சியில் எதாவது இடையூறுகள் நிகழ்ந்தால் பொறுத்தருள்க.
அனைத்துலக உசன் மக்களுக்கும் பிள்ளையார் தரிசனம் கிடைக்க
இந்த நேரடி ஒளிபரப்புக்கு அனுசரணை வழங்கும் கனடா JBN Auto நிறுவன அதிபர் திரு .கருணி விநாசித்தம்பி அவர்களுக்கு நன்றிகள்
நேரடி ஒளிபரப்பு எமது இணையதளமான http://www.usan.ca/ எனும் தளத்தில் இடம்பெறும் .


Monday, March 21, 2011

கிருத்திகன் நவக்குமாரன் - 2010 GCE O/Level

உசனைச் சேர்ந்த திரு நவக்குமாரன் (Commercial Bank, Jaffna) தயாவதி தம்பதியரின் மகன் செல்வன் கிருத்திகன் நவக்குமாரன் 2010 GCE O/Level பரீட்சியில் St. John's Collegeஇல் 8A & 1B பெற்று திறமைச் சித்தியடையுந்துளார்.


Kirithigan Navakumaran, son of Navakumaran (Commercial Bank, Jaffna) and Thayavathi has successfully completed 2010 GCE O/Level examinations at St. John's College (studied in English medium) with the result of 8A and 1B.

Kirithigan is also a member of the St. John's cricket team.





அனைத்துலக உசன் மக்களின் ஒரேகுடில்

எமது உசன் இணையத்தளத்தை பார்வையிட கடந்த வாரம் மட்டும் 21 நாடுகளில் இருந்து 621 மக்கள் வருகை தந்துள்ளனர். இதில்

  1. கனடா - 227
  2. ஸ்ரீலங்கா - 91
  3. இங்கிலாந்து - 87
  4. பிரான்ஸ் - 44
  5. சுவிஸ்லாந்து - 42
  6. டென்மார்க் - 24
  7. அவுஸ்ரேலிய - 23
  8. ஜெர்மனி - 20
  9. அமெரிக்க - 16
  10. இத்தாலி - 16

ஆகிய மக்கள் எமது தளத்தை பயன்படுத்துவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தருகிறது.

தொடர்ந்து உங்களால் முடிந்த செய்திகள் ஆக்கங்கள் வாழ்த்து செய்திகளையும் நீங்கள் உசன் மக்களுடன் பரிமாறிக்கொள்ள எமது தளத்தை பயன்படுத்தலாம் .உங்கள் ஆதரவுக்கும். பங்களிப்புக்கும் நன்றிகள் உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


ஸ்ரீ கஜகேணி விநாயகப்பெருமான் ஆலய மகோற்சவ நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்து தென்மராட்சி பிரிவில் உசன் பகுதியில் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ கஜகேணி விநாயகப்பெருமான் ஆலயமானது சில திருத்த வேலைகள் செய்யப்பட்டு அவ் வேலைகள் முடிவடைந்து தற்பொழுது மஹா கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகின்றது. விநாயகர் அடியார்களே மகோற்சவ நிகழ்வுகள் வருமாறு:-

21-03-2011 திங்கட்கிழமை பங்குனிமாதம் 7ம் நாள்-கர்மாரம்பம்
22-03-2011 செவ்வாய்க்கிழமை பங்குனிமாதம் 8ம் நாள் காலை 10.00 மணிமுதல் புதன்கிழமை பகல் 11.00 மணிவரை எண்ணெய்க்காப்பு இடம்பெறும்
24-03-2011 வியாழக்கிழமை பங்குனிமாதம் 10ம் நாள் காலை 9.26-11.00 மணிவரை அனுஷ நட்சத்திரமும், இடப லக்கினமும்,சித்த யோகமும் கூடிய சுப முகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகமும் இடம்பெறும்.



Friday, March 18, 2011

"தாய்மடி தேடி" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா


உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியும் திரு.திருமதி குலநாயகம்(தபால் உழியர்) அவர்களின் மகளுமான திருமதி.கார்த்திகாஜினி சுபேஸ் அவர்களினால். உருவாக்கப்பட்ட "தாய்மடி தேடி" எனும் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு சங்கரப்பிள்ளை தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் கடந்த 6 ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



Wednesday, March 16, 2011

இணையதள வெளியீட்டு நிகழ்வு -வீடியோ



அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடிலனான www.usan.ca எனும் இணையத்தளம் புதுப்பொலிவுடன் கடந்த February மாதம் 12 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. உசனிலும் IT நிறுவனம் திறந்து வைக்கபட்டது. இந்த நிகழ்வில் கனடா ஒன்றியத்தின் தலைவர் உரை, செயலாளர் அறிமுக உரை ஆகியவற்றுடன் எமக்குப் பல துறையிலும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கிவருவதுடன் இந்த தளத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவரும், கணினி விற்பன்னருமான செந்தூரன் சிவானந்தன் அவர்கள் தளத்தை வெளியிட்டு அறிமுக உரை நிகழ்த்தினார். இவர் உசன் பபி அவர்களின் சகோதரன் ஆனந்தன் அவர்களின் மகனாவார்.

செந்தூரன் தற்போது கனடாவிலிருந்து நேரடியாக உசன் வாழ் இளம் சமுதயத்தினருக்கான கணணி தொழில்நுட்ப ஆலோசனைகளும் , உதவிகளும் வழங்கி வருகிறார். உசன் வாழ் இளம் சமுதயத்தினருக்கு இவரின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. செந்துரனுக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும் எமது நன்றிகளும், உங்கள் உசன் பணி தொடர வாழ்த்துக்களும்.


Monday, March 14, 2011

செல்வி பி. தர்மிகா அவர்களின் முதலாவது பிறந்த தின வாழ்த்து....

உசன், மிருசுவிலைச் சேர்ந்த திரு./திருமதி பிரபாகரன் சிவசீலா தம்பதிகளின் ஏக புத்திரி செல்வி. பிரபாகரன் தர்மிகா தனது முதலாவது பிறந்த தினத்தை உசன், மிருசுவிலில் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் 15-03-2011 (செவ்வாய்க்கிழமை) அன்று வெகு விமர்சையாகவும், மிகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடுகிறார்.
தர்மிகா எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் திருவருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தினர் சார்பாகவும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா சார்பாகவும், அனைத்துலக உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம். (அ.பிரபாகரன்-0094-776578032)





Sunday, March 13, 2011

உசனுக்குள் ஒரு மர அரிவு ஆலை......

புகையிரத நிலைய வீதி, உசன், மிருசுவில் என்னும் முகவரியில் உசனில் வசிக்கும் ஒருவரினால் பேராலையான் மராரிவு ஆலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனிவரும் காலங்களில் உசன் வாழ் மக்கள் மிகவும் இலகுவான முறையில் வீட்டுக்குத் தேவையான தளபாடங்கள் போன்ற பல மரத்தினால் அமையும் பொருட்களை வெகு விரைவில் செய்து பெற்றுக்கொள்ளலாம்





உசனில் இயங்கிவரும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் நிலையம் மீள்புணரமைப்பு.....

உசனில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இயங்கிவரும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் நிலையம் மதில், மின்சாரம் போன்ற பல வசதிகளுடன் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக தற்போது புதுப்பொலிவுடன் இயங்குகிறது....





அன்பான உசன் உறவுகளுக்கு

நாம் எக்காலத்திலும் நடந்திராத வகையில் அனைத்துலக உசன் மக்களையும் ஒருநிர்வாகத்தின் கீழ் இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் சில ஆதரவுகளும் முயற்சிகளும். முன்னோக்கிய பாதையில் நகர்கின்றன. இருப்பினும் மிக அண்மைக்காலமாக உசன் எனும் பெயரில் பல முகநூல் (Facebook ) உருவாக்கம் பெற்று வருகிறது. அது சில நாட்களில் செயலற்று போய்விடுகிறது. இது அனைத்து மக்களயும் குழப்பத்தில் விடும் செயல். ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும் என நாம் பல விடயங்களை நிகழ்த்திகாட்டியிருக்கிறோம்.
எனவே நீங்கள் அனைவரும்  உசனின் பிள்ளைகள் அனைவருக்கும் உரிமையும் ஆசையும் இருக்கும் என்பதை அறிவோம். இருப்பினும்
எமக்கு உங்களை போன்ற உணர்வாளர்களின் உதவியும்  திறமையும் தேவை நீங்கள் எங்களுடன் தொடர்புகொண்டால்.எமது ஊடக தளங்களில் உங்களுக்கும் இடம் தருவோம் அது சிறப்பாக அமையும். எனவே இனிமேல்
தயவு செய்து  உசன் குறித்தஅமைப்பு ரீதியான facebook  மற்றும் இணைய தளங்கள் உருவாக்கி மக்களை குழப்பத்தில்
விடாமல் எம்முடன் சேர்ந்து பணியாற்ற உங்கள் திறமைகளை பயன்படுத்த அனைவரையும்
அன்பு கரம் கொண்டு அழைக்கிறோம்.
தற்போது usan .ca இணையத்தளம் usanpeople ,usanmurukan  முகநூல் ஆகியனவே எமது நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ தளங்களாகும்.
இருப்பினும் உசன் முருகன் கோவிலுக்காக usanmurugan .com எனும் தளமும் உருவாக்கம் பெற்றுவருகிறது.
அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து திறமைகளையும் பயன்படுத்த முனைவோம். அனைவரும் வாருங்கள் உங்கள் கருத்துகளை தாருங்கள் உங்களுடன் கைகோர்க்க நாம் என்றும் தயாராக உள்ளோம்.
       " நாம்  ஒன்றுபட்டால்
        உசன் வென்று நிற்கும்


Friday, March 11, 2011

இயற்கை அழிவில் ஆகுதியனவர்களுக்கு அஞ்சலி

பூமி பந்து தனது அமைதியை குலைத்து ஆட்டம்  கொள்ளும் இந்த காலபகுதியில். தொடர்ச்சியாக நடக்கும் அனர்த்தங்களில் இருந்து மீளமுன்
அறிவியல் தொழில்நுட்பத்தின் உயிர் நாடியாக விளங்கும் ஜப்பான் நாட்டின்மீது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தினால். உயிரிளந்தவர்கலுக்கும்.அதன் அண்டைய நாடுகளில் அகப்பட்டு இந்த பூமியை விட்டு சென்றவர்களுக்கும். எமது அஞ்சலியை காணிக்கை யாக்குகிறோம்.
இந்த இயற்கை அழிவில் பாதிக்கபட்ட அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்.


சுவிஸ் வாழ் உசன்மக்களுக்கு............

இன்றைய நிலையில் உசன் மக்களாகிய நாங்கள் ஒரேகுடையின்கீழ் ஒருமித்தகருத்துடன் திரண்டுஎமது உசன் ஊரை மீண்டும் மீட்டெடுக்கும் மிகபெரும் கருமத்தை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
கனடா உசன் மக்கள் ஒன்றியமானது. தகுந்த நிர்வாக கட்டமைப்போடும். பொறுப்போடும் அனைத்து உசன் மக்களயும் இணைக்கும் முயற்சியில் முதல் படியாக. சுவீஸ் நாட்டில் வாழும் உசன் மக்களின் நிர்வாக இணைப்பாளராக திரு.மனோ அவர்களை நாம் நியமித்துள்ளோம்.எனவே நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டு உங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ளுங்கள். Email:saravanan.ravi@hotmail.com
தொடரும் எமது அடுத்த கட்ட முயற்சியில் எம்மோடு இணைந்து கை கொடுக்க உங்கள் அனைவரையும் அன்புக்கரம் கொண்டு அழைக்கிறோம்.
உங்கள் Email :தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நாம் அனைத்து நாடுகளிலும் எமது கட்டமைப்பை அமைக்க எண்ணி உள்ளோம் வேறு நாடுகளில் உள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு எமது முயற்சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம். ஒன்றுபட்டால் நிச்சயம்  பலன் உண்டு.


Wednesday, March 9, 2011

புனரமைக்கப்பட்ட ஈச்சங்காடு மயானம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் - பேராதரவுடன் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினர் முன்னெடுத்த ஈச்சங்காடு சுடலை திருத்த வேலையில் தகனமேடையின் மேல் கூரை பணியானது இனிதேநிறைவடைந்துள்ளது. மிகவும் சிறந்த திட்டமிடலுடன் நீண்டகால பாவனையை கருத்தில் கொண்டுஎமது அபிவிருத்தி கட்டமைப்பினர். இந்த இறுதி கிரிகை மண்டபத்தை மிகவும் சிறப்பான முறையில் நிறைவேற்றயுள்ளனர் .
இரும்பு சட்டங்களும் நீண்டகால பாவனை கொண்ட கூரை தகடுகளும் சிறப்பாக இந்த மண்டபத்திற்கு பாவிக்கபட்டுள்ளது . மின்சாரம் இல்லாத இந்த மயானத்தில் மிகவும் சிரமத்துடன் இந்த பணியை நிறைவேற்ற அயராது உழைத்த அனைத்து உசன் வாலிபர்களுக்கும் இவர்களை வழிநடத்திய திரு.பிரபா அவர்களுக்கும் அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும்.உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் சார்பாகவும்.நன்றிகள்.
 
நீண்ட பல கால சிந்தனயில் இருந்த இந்த பணிக்கு உருவம் கொடுக்க எமக்கு நிதி உதவி வழங்கியகனடா வாழ் மக்களுக்கு எமது சிறப்பான நன்றிகள்.
              உங்கள் பங்களிப்பு தொடர்ந்தால்.........
             உசனில் எங்கள் பணி தொடரும். ...........
தொடர்ச்சியாகஉசனில்முன்னேடுக்கபடவுள்ள. அத்தியாவசிய அபிவிருத்தி 
 திட்டங்களுக்குஉங்கள் நிதி உதவியை நாடி நிக்கிறோம். தயவு செய்து நீங்களாக முன்வந்து உங்கள் வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள். உங்கள் ஒவொருவரின் கையையும் உசன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.





Sunday, March 6, 2011

உசன் முருகன் 108வலம்புரி ஸ்கந்தயாகம்




உசன்முருகபெருமானுக்குமிகசிறப்பாகஅதிசக்திவாய்ந்த வலம்புரிசங்ககொண்டு மகா ஸ்கந்தயாகம் நேற்று நடைபெற்றது . 
பல அந்தணர்களின் மந்திர ஒலி  முழங்க ஸ்ரீ சுந்தரேஸ்வர குருக்களின் 
தலைமையில்  சிறப்பாக அமைக்கப்பட்டஓமகுண்டத்தில்அவிப்போருட்கள்சொரிந்து.யாகம் நடைபெற்றது.இந்தவலம்புரிசங்கின் மகிமை பற்றியும் விவரிக்கபட்டது

இன்நிகழ்வில்கலந்துகொள்ள யாழ்மாவட்டத்தின்பல பகுதிகளிலும்இருந்து 
ஆயிரகணக்கான மக்கள் கோவில் வீதியெங்கும் நிறைதிருன்தனர்மக்களின் 
போக்குவரத்துக்காக .உசனுக்குசிறப்பு பேருந்து சேவைகளும் நடைபெற்றன. இந்த அதி சக்தி வாய்ந்த 
யாக நிகழ்வை
உலகெங்கும்இருந்து பார்க்கும் வகையில் பவபிரியசர்மா அவர்களின் முயற்சியில் நேரடி வீடியோ காட்சியும் எமது இணையதளம் மூலம் ஒளிபரப்பபட்டது . இந்த சிறப்பு யாகத்தின் மேலதிக படங்கள் எமது Photosபகுதியில் உள்ளது.இன் நிகழ்வை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கு கனடா ஒன்றியத்திற்கு 
தொழில் நுட்பஉதவி வழங்கி வரும் செல்வன் .சிவானந்தன் செந்துரனுக்கு முருகபெருமான்
 மெய்யருள் கிடைக்க வேண்டுகிறோம்.இந்த யாஹா நிகழ்வு சிறப்புற நடைபெற வழி அமைத்த
அனைவருக்கும் நன்றிகள்.  
 




Saturday, March 5, 2011

நேரடி ஒளிபரப்பு

உசன் கந்தசுவாமி கோவிலில் நடைபெறும். ஸ்கந்த யாக நிகழ்வின் நேரடி வீடியோ ஒளிபரப்பு.இலங்கை நேரம் காலை 7 மணி முதல் www.usan.ca இணையதளம் மூலம்  ஒளிபரப்படும்,  


உசன் கந்தசுவாமி கோவிலில் ஸ்கந்த ஹோமப்பெருவிழா


அனைத்துலக உசன் மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி வேண்டி உசன் முருகப்பெருமானுக்கு குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் தலமையில் பல சிவாச்சாரிகள் கலந்து சிறப்பிக்கும் மகா உன்னத பாஞ்ஜசன்ய சகித 108 வலம்புரி சங்காபிசேக ஸ்கந்த ஹோமப்பெருவிழா 06.03.2011 அன்று நடைபெற இறையருள் கைகூடி உள்ளது இவ் ஹோமப்பெருவிழாவை இம்முறை மிகவும் சிறப்பாக நடாத்த எண்ணி உள்ளோம் எனவே உசன் முருகப்பெருமான் பக்த மெய் அடியார்களே உங்களிடம் இருந்து சகல விதமான பங்களிப்பையும் எதிர் பாக்கின்றோம் இப்பங்களிப்பை செய்ய விரும்பியவர்கள் எமது பிரதம குருவின் தொலைபேசி எண்:-0777 238561 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை செய்யலாம் என்பதை கேட்டுகொள்கின்றோம்.


Wednesday, March 2, 2011

திரு.சரவணை தாமோதரம்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல்


உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் படித்த மகளீர் திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணை தாமோதரம்பிள்ளை(ஓய்வு பெற்ற உப அஞ்சல் அலுவலக அதிபர், விடத்தற்பளை) அவர்கள் இன்று அதாவது 02-03-2011 அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான சரவணை-முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், கல்வயலைச் சேர்ந்த கந்தசாமி-யோகம்மா தம்பதியரின் மருமகனும், செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும் பராசக்தி, செல்லத்துரை,பத்மாவதி,செல்வராசா,பூபதி,ஜெகராசா அவர்களின் அன்புச் சகோதரனும் ஐங்கரன்(முகாமைத்துவ உதவியாளர், பிரதேச செயலகம், சாவகச்சேரி),தாரணி(ஆசிரியை, கிளி/பளை மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு தந்தையும் ஜெயபூரணி(நிகழ்ச்சித்திட்ட உதவியாளர், பிரதேச செயலகம், சாவகச்சேரி),அச்சுதன்(நர்த்தகி பான்சி உரிமையாளர்) அவ்ர்களின் அன்பு மாமனாரும் அபினவன்,நர்த்தகி,ஜக்சிகன் அவர்களின் செல்லப் பேரனுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் 03-03-2011 அன்று படித்தமகளீர் குடியேற்ற திட்டத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் நடைபெற்று மாலை 2.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் படித்த மகளீர் குடியேற்றத்திட்ட இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருவதோடு
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
தகவல்,

மகன்,
ஐங்கரன்
0094-777-112410