Wednesday, February 9, 2011
உசன் மக்களுடன் ஒரு காணொளி (Video) உறவுப்பாலம்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் முயற்சியில் உசனில் உருவாகிய தொடர்பாடல் & கணினி நிலையம் உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்தின் முயற்சியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ திறப்புவிழா கனேடிய நேரம் February 12, 2011 சனிக்கிழமை மாலை 6 மணிக்குநடைபெறவுள்ளது. அன்றைய தினம் உசனில் நடைபெறும் திறப்புவிழாவை நேரடியாக காணொளி (Video) வாயிலாகக் கண்டுகளிப்பதுடன் உங்கள் உசன் உறவுகளுடன் நீங்களும் நேரடியாகக் காணொளி வாயிலாக உறவாடும் சந்தர்ப்பமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உசன் கிராமத்தின் முழு மக்களும் கலந்துகொளும் வகையில் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது. அன்றைய தினம் உசனில் இருக்கும் எமது அபிவிருத்திக் கட்டமைப்பு நிர்வாகிகளின் நேரடி உரையாடலும் இடம்பெறும். எமது உத்தியோக பூர்வ இணையத்தளமான http://www.usan.ca/ புதுப்பொலிவுடன் ஆரம்பித்து வைக்கப்படும் சிறப்பு நிகழ்வும் உண்டு. நீண்ட கால இடைவெளியின் பின்னர் உங்கள் உசன் உறவுகளை நேரில் கண்டு உங்கள் நினைவுகளை மீட்கும் வகையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா செய்த முதல் உறவுப்பால முயற்சி இதுவாகும். எனவே கனடா வாழ் அனைத்து உசன் மக்களையும் இந்த நிகழ்வில் கலந்து உங்கள் உசன் உறவுகளை நேரில் கண்டு களிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். உங்கள் வரவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகிறோம். நிகழ்வு நடைபெறும் இடம்: 2543 Paharmacy Avenue (at Finch Avenue) (Daily Needs Plaza), Scarborough, ON Canada.
Baskaran
|
|