Saturday, February 19, 2011
புத்தகங்கள் சேகரிப்பு
உசனில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளின் அடுத்தபடியாக அங்கு நூலகமொன்றை அமைப்பதற்கான வேலைத்திடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கான புத்தகங்கள் சேகரிக்கும் பணி கனடாவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரையிலும் பலர் தமது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். மேலும் பலரிடமிருந்து பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவிதமான புத்தகங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நல்ல பணிக்குத் தங்கள் ஆதரவைத் தரவிரும்பும் அனைவரும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த மாத இறுதியில் கனடாவிலிருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. எனவே உங்கள் பங்களிப்பை விரைந்து செய்யுங்கள். நன்றே செய்வோம். அதையும் இன்றே செய்வோம்.
Baskaran
|
|