அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, February 14, 2011

தொடர்பாடல் நிலையத் திறப்புவிழா


உசனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தொடர்பாடல் & கணினி நிலையத் திறப்புவிழா கடந்த February 12, 2011 மாலை 8 மணிக்கு (Eastern Standard Time) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்விலே உசனில் இயங்கிவரும் அனைத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டது சிறப்பம்சமாக அமைந்தது. அங்கு பேசிய அனைவரும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு Toronto, Canadaa வில் இடம்பெற்றது. கனடாவாழ்உசன் மக்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர். இங்கு உரையாற்றிய ஒன்றியத் தலைவர் திரு. கனகசபை நகுலன், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புத் தொடர்ந்து கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

இந்த நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பை Photos பகுதியில் பார்க்கலாம்.