2009 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவிகள் யாழ் மாவட்டத்தில் முதலாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மிகவும் யுத்தம் நடந்த வேளையிலும் உசனில் இருந்தவாறே சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் கல்விகற்று சாதனை படைத்த மாணவிகளை பாராட்டுகிறோம்.
செல்வி.தங்கவேல் உஸானி 3A சித்திகளை பெற்று தற்போது பரதேனிய பல்கலை கழகத்தில் கலை பிரிவில்
பட்டபடிப்பை தொடர்கின்றார்.செல்வி.ரம்யா சிவராசா 3A சித்திகளை பெற்று யாழ் பல்கலை கழகத்தில் சட்ட துறையில் பட்ட படிப்பை தொடர்கின்றார். இவர்களுக்கு அனைத்துலக வாழ் உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.