அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, February 28, 2011

திருமதி இராஜரட்ணம்-இராஜேஸ்வரிஅவர்களின் மரணஅறிவித்தல்

                                                                                                                                 
உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜரட்ணம்-இராஜேஸ்வரி (ஈஸ்வரி ) அவர்கள் 28-02-2011 அன்று 10 மணியளவில் உசனில் காலமானார்.
         அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-வாலைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், இராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும், சிவமலர், நடேசு, கனகரட்ணம்(நேவி) அகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 28-02-2011 அன்று உசனில் இருக்கும் அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல்,
சகோதரன் கனகரட்ணம்
   94774249242




Sunday, February 27, 2011

மரண அறிவித்தல்.

 உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு - 4, பம்பலப்பிட்டி தொடர்மாடியைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து பெரியதம்பி அவர்கள் February 27, 2011, ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பையா(தம்பு) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு. சிதம்பரப்பிள்ளை பெரியதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துநாயகம் காசிப்பிள்ளை, கனகபூரணி கந்தையா, யோகாம்பாள் கணேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன் (பாபா), மனோகரன் (பாபு) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தமலர், குமுதினி, குணசேகரன், தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சாரங்கன், பூஷிதா, லோஷிதா, தேஷிதன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும்,பகீதரன், பகீரதி, ரவிரதன், தசரதன், ஞானரதி, மனோரதி, ஜெயரதி, தேவகி, துவாரகி, ஜீவகி, ரூபகி ஆகியோரின் அருமைப் பெரியம்மாவும்,ரத்தினம் அவர்களின் வளர்ப்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் February 28, 2011, திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணி தொடக்கம் No 2 First Floor, 'K' Block, Bambalapitiya Govt Flats, Bambalapitiya, Colombo 04 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, March 1, 2011, செவ்வாய்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பி.ப 5.00 மணியளவில் பூதவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
S.P.மனோகரன்(பாபு - மகன்)
தொடர்புகளுக்கு
S.P.மனோகரன்(பாபு - மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112585030
செல்லிடப்பேசி: +94775170481


உசனுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு


          உசனில் இயங்கும் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகத்திற்கு. நீண்ட காலமாக உரிய விளையாட்டு உபகரணங்கள்இல்லாமல் அங்கு இருக்கும் இளம் சமுதாயத்தினர் . சரியான பயிற்சிகள் இன்றி போட்டிகளில் கலந்து கொண்டு வந்தனர். இக் குறையினை நிவர்த்திசெய்யும் முகமாகவும் உசனில் இருக்கும் இளம் சமுதயத்தினருக்கு விளையாட்டில் உற்சாகம் ஊட்டும் வகையிலும். உசனை சேர்ந்த அமரர் திரு.க.வெற்றிவேலு(CTB ) அவர்களின் நினைவாக சில விளையாட்டு உபகரணங்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திரு.கனகசிங்கம் அவர்கள் உபகரணங்கள் வழங்கும் போது

அதில்உதைபந்து 05 ,கைபந்து -02 ,கூடைபந்து 01 , கிரிக்கெட் உபகரணம்1 set ,Badminton -3 Set Badminton Net 01 ,மென்பந்து -10 ஆகிய சில பொருட்களும்,
திரு.கனகசிங்கம் அவர்களால் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழக உறுப்பினர்களிடம் கையளிக்கபட்டது.



திரு.ஸ்ரீ இராமநாதன் அவர்கள் உபகரணங்கள் வழங்கும்போது


திரு.ஸ்ரீ இராமநாதன் அவர்கள் உபகரணங்கள் வழங்கும்போது

நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகுதி மக்கள்


Saturday, February 26, 2011

உசன்-கனடா உறவுப்பால நிகழ்வு - பகுதி 2


உசன் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் உசனில் அமைக்கபட்ட IT  நிலைய திறப்பு விழாவும் கனடா மக்களுடனான வீடியோ உறவுப்பால நிகழ்வும். மிகவும் சிறப்பாக நடைபெற்றது . கனடாவில் நடைபெற்ற நிகழ்வில் உசன் மக்களுக்காக
கனடாவில் இருந்து  உசன்   ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் உசன் அபிவிருத்தி நிர்வாக பொறுப்பாளர் திரு.அஜந்தன் வெற்றிவேலு சிறப்புரை நிகழ்த்துவதை  காணலாம்.



Monday, February 21, 2011

உசன்-கனடா உறவுப்பால நிகழ்வு - பகுதி 1



உசன் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் உசனில் அமைக்கபட்ட IT  நிலைய திறப்பு விழாவும் கனடா மக்களுடனான வீடியோ உறவுப்பால நிகழ்வும். மிகவும் சிறப்பாக நடைபெற்றது . கனடாவில் நடைபெற்ற நிகழ்வில் உசன் மக்களுக்காக நிகழ்த்தபட்ட சில உரைகளின் வீடியோ பதிவு இங்கே இணைக்கபட்டுள்ளது. மேலதிக நிகழ்வுகளும் தொடர்ந்து வெளியிடப்படும்.


Saturday, February 19, 2011

மரண அறிவித்தல்.

உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சற்குணதேவன் அவர்கள் February 13, 2011 அன்று கனடாவில் காலமானார். அன்னார் பெரியதம்பி சிவபாதசுந்தரம் (Police சிவம்) அவர்களின் மகள் மணிமேகலா துஷ்யந்தனின் (மதி) மாமனார் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் February 20, 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று 1591 Elgin Mills Road E இல் (Leslie Street and Elgin Mills Road) அமைந்திருக்கும் Elgin Mills Cemetary இல் காலை 10 மணிக்கும் மதியம் 12 மணிக்கும் இடையில் நடைபெறும். அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.


Collecting Books in Canada for Public Library in Usan

As part of the on going development in Usan, a plan to open a public library there is underway. United People Association of Usan in Canada is undertaking this special project. They are collecting books in Canada for this public library. This is a tremendous task. Since this project is launched, so many well wishers donated books. More books are being collected. No book will be rejected. Your are being requested to donate any kind of books. Please contact United People Association of Usan in Canada to donate your books.

A shipment of books will be sent at the end of this month. Hence, please donate your books today.


புத்தகங்கள் சேகரிப்பு

உசனில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளின் அடுத்தபடியாக அங்கு நூலகமொன்றை அமைப்பதற்கான வேலைத்திடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கான புத்தகங்கள் சேகரிக்கும் பணி கனடாவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரையிலும் பலர் தமது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். மேலும் பலரிடமிருந்து பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவிதமான புத்தகங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நல்ல பணிக்குத் தங்கள் ஆதரவைத் தரவிரும்பும் அனைவரும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த மாத இறுதியில் கனடாவிலிருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. எனவே உங்கள் பங்களிப்பை விரைந்து செய்யுங்கள். நன்றே செய்வோம். அதையும் இன்றே செய்வோம்.


Wednesday, February 16, 2011

உசன்-கனடா உறவுப்பால நிகழ்வு



உசன் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் உசனில் அமைக்கபட்ட IT  நிலைய திறப்பு விழாவும் கனடா மக்களுடனான வீடியோ உறவுப்பால நிகழ்வும். மிகவும் சிறப்பாக நடைபெற்றது . கனடாவில் நடைபெற்ற நிகழ்வில் உசன் மக்களுக்காக நிகழ்த்தபட்ட சில உரைகளின் வீடியோ பதிவு இங்கே இணைக்கபட்டுள்ளது. மேலதிக நிகழ்வுகளும் தொடர்ந்து வெளியிடப்படும்.


மரண அறிவித்தல்

உசனைச் சேர்ந்த சிவானந்தசோதி (கோவில்கடவை ஆனந்தன்) அவர்களின் மாமனார் திரு. சற்குணராஜா அருளானந்தம் அவர்கள் கனடாவில் காலமானார். அன்னார் யாழ் யோகர் சுவாமிகளின் பேரனாவார். அன்னாரின் பூதவுடல் 19 .02 .2011 சனிக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரையும் 4164 Shepperd Ave East ல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் பார்வைக்கு வைக்கபட்டு செவ்வாய்க்கிழமை காலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்றுத் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உசன் மக்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு
கேட்டுகொள்கிறோம். அன்னாரின் ஆத்மசாந்திக்காக வேண்டுகிறோம். தகவல் மகன்மார் : திருக்குமார் 4168285589
ராஜ்குமார் 4162629795 , 4164317835


Monday, February 14, 2011

தொடர்பாடல் நிலையத் திறப்புவிழா


உசனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தொடர்பாடல் & கணினி நிலையத் திறப்புவிழா கடந்த February 12, 2011 மாலை 8 மணிக்கு (Eastern Standard Time) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்விலே உசனில் இயங்கிவரும் அனைத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டது சிறப்பம்சமாக அமைந்தது. அங்கு பேசிய அனைவரும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு Toronto, Canadaa வில் இடம்பெற்றது. கனடாவாழ்உசன் மக்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர். இங்கு உரையாற்றிய ஒன்றியத் தலைவர் திரு. கனகசபை நகுலன், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புத் தொடர்ந்து கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

இந்த நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பை Photos பகுதியில் பார்க்கலாம்.


Saturday, February 12, 2011

புதுப்பொலிவுடன் "ஆசிர்வாதம்" வீதி



உசனில் இருக்கும் ஆசிர்வாதம் வீதியை நிரந்தரமாக புனரமைக்கும் தேவை குறித்து உசன் ஐக்கிய வாலிபர் சங்கம் .கனடா மக்கள் ஒன்றியத்திடம் தெரிவித்திருந்தது .
இது குறித்து அந்த வீதியை அமைத்த DR .திரு .இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் .வீதியை புனரமைக்கும் பணியை
கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினூடாக முன்னெடுக்க தனது விருப்பத்தை தெரிவித்தார். இன் நடவடிக்கை குறித்து நாம் உசன் அபிவிருத்தி கட்டமைப்புடன் திட்டமிட்டு புதிய நுட்ப முறையில் நிரந்தரமாக இந்த வீதியை புனரமைக்கும் பணியில் உசன் வாலிபர் சங்கம்-உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகமும் ஈடுபட்டு அவ் வேலை ஆனது வீதியின் ஆரம்ப பகுதியில் பெயர்பலகை நாட்டப்பட்டு திருத்த வேலைகள் இனிதே நிறைவாகி உள்ளது.

 


உசன் கந்தசுவாமி கோவிலில் "ஸ்கந்த யாகம்"


ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் கோயில் "அருள் வாக்கு சித்தர்" குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் தலமையில் பல சிவாச்சாரிகள் கலந்து சிறப்பிக்கும் மகா உன்னத பாஞ்ஜசன்ய சகித 108 வலம்புரி சங்காபிசேக ஸ்கந்த ஹோமப்பெருவிழா 06.03.2011 அன்று நடைபெற இறையருள் கைகூடி உள்ளது இவ் ஹோமப்பெருவிழாவை இம்முறை மிகவும் சிறப்பாக நடாத்த எண்ணி உள்ளோம் எனவே உசன் முருகப்பெருமான் பக்த மெய் அடியார்களே உங்களிடம் இருந்து சகல விதமான பங்களிப்பையும் எதிர் பாக்கின்றோம் இப்பங்களிப்பை செய்ய விரும்பியவர்கள் எமது பிரதம குருவின் தொலைபேசி எண்:-0777 238561 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை செய்யலாம் என்பதை கேட்டுகொள்கின்றோம்...நன்றி


வாழ்த்துகிறோம்.

 2009 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவிகள் யாழ் மாவட்டத்தில் முதலாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மிகவும் யுத்தம் நடந்த வேளையிலும் உசனில் இருந்தவாறே சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில்  கல்விகற்று சாதனை படைத்த மாணவிகளை பாராட்டுகிறோம்.


செல்வி.தங்கவேல் உஸானி 3A சித்திகளை பெற்று தற்போது பரதேனிய பல்கலை கழகத்தில் கலை பிரிவில்
பட்டபடிப்பை தொடர்கின்றார்.

செல்வி.ரம்யா சிவராசா 3A  சித்திகளை பெற்று யாழ் பல்கலை கழகத்தில் சட்ட துறையில் பட்ட படிப்பை தொடர்கின்றார். இவர்களுக்கு அனைத்துலக வாழ் உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.


Wednesday, February 9, 2011

உசன் மக்களுடன் ஒரு காணொளி (Video) உறவுப்பாலம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் முயற்சியில் உசனில் உருவாகிய தொடர்பாடல் & கணினி நிலையம் உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்தின் முயற்சியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ திறப்புவிழா கனேடிய நேரம் February 12, 2011 சனிக்கிழமை மாலை 6 மணிக்குநடைபெறவுள்ளது. அன்றைய தினம் உசனில் நடைபெறும் திறப்புவிழாவை நேரடியாக காணொளி (Video) வாயிலாகக் கண்டுகளிப்பதுடன் உங்கள் உசன் உறவுகளுடன் நீங்களும் நேரடியாகக் காணொளி வாயிலாக உறவாடும் சந்தர்ப்பமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உசன் கிராமத்தின் முழு மக்களும் கலந்துகொளும் வகையில் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது. அன்றைய தினம் உசனில் இருக்கும் எமது அபிவிருத்திக் கட்டமைப்பு நிர்வாகிகளின் நேரடி உரையாடலும் இடம்பெறும். எமது உத்தியோக பூர்வ இணையத்தளமான http://www.usan.ca/ புதுப்பொலிவுடன் ஆரம்பித்து வைக்கப்படும் சிறப்பு நிகழ்வும் உண்டு. நீண்ட கால இடைவெளியின் பின்னர் உங்கள் உசன் உறவுகளை நேரில் கண்டு உங்கள் நினைவுகளை மீட்கும் வகையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா செய்த முதல் உறவுப்பால முயற்சி இதுவாகும். எனவே கனடா வாழ் அனைத்து உசன் மக்களையும் இந்த நிகழ்வில் கலந்து உங்கள் உசன் உறவுகளை நேரில் கண்டு களிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். உங்கள் வரவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகிறோம். நிகழ்வு நடைபெறும் இடம்: 2543 Paharmacy Avenue (at Finch Avenue) (Daily Needs Plaza), Scarborough, ON Canada.


Tuesday, February 8, 2011

கோடைகால ஒன்றுகூடல்.2011


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் கோடைகால ஒன்றுகூடல் August 28, 2011 ஞாயிற்றுக்கிழமை Neilson Park இல் இடம்பெறும் என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். இந்த நாளை ஒன்றுகூடலுக்காக ஒதுக்கி அன்றைய தினத்தில் உங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
வெளிநாடுகளில் வசிக்கும் எங்கள் உறவுகளே இ...ந்த வருடம் கனடாவுக்கு வரும் எண்ணத்தோடிருந்தால் இந்தத் தினத்தில் இங்கு நிற்கக்கூடியதாக வாருங்கள். இதன் மூலம் உசன் மக்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்ததிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைகிறது. உங்கள் வருகையை எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
எங்கள் உறவுகளே, FaceBook இல் நீங்கள் usanpeople ஓடு Friends ஆக இருந்தால் Event Invitation ஒன்றைப் பெற்றிருப்பீர்கள். அதன் மூலம் உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள். usanpeople ஓடு Friends ஆக இல்லாதவர்கள் உடனடியாக இணைந்து கொள்ளுங்கள். FaceBook இல் இல்லாதவர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அன்னுப்பிவைப்பதன் மூலம் எங்களோடு தொடர்பில் இருக்கலாம்.
உறவுகளோடு கரம் கோர்த்து ஒன்றாகக் குதூகலிப்போம்!


Sunday, February 6, 2011

திருமண வாழ்த்துக்கள்


உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி.அ.நடராஜபிள்ளை அவர்களின் புதல்வன் திருநிறைச் செல்வன் ஜதுர்ஸன் அவர்களும் மீசாலை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த திருமதி.இராஜேஸ்வரி தியாகராஜா தம்பதிகளின் புதல்வி திருநிறைச் செல்வி சிவதீபம் அவர்களும் இன்று அதாவது 06-02-2011 அன்று திருமணபந்தத்தில் இணைகின்றனர் அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்...நன்றி...




திருமண வாழ்த்துக்கள்.

 
உசனைசேர்ந்ததிரு. திருமதி. அரியரத்தினம்தம்பதிகளின் புதல்வன் நிதர்சன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் கலட்டியை சேர்ந்த திரு. திருமதி குணரத்தினம்தம்பதிகளின் புதல்வி நிஷ்மதா அவர்களுக்கும்.  06 -02 -2011 ஞாயிற்றுக்கிழமை. யாழ்ப்பாணத்தில்  .உசன் முருகப்பெருமான் அருளால் திருமணம் இனிதே நடைபெற்றது திருமண வாழ்வில் இணையும் தம்பதியர்க்கு  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் அனைத்துலக உசன் மக்களும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.வாழ்க பல்லாண்டு