உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் & உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்துடன் இணைந்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசனில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஈச்சங்காடு மயான அபிவிருத்தி வேலைகள் சீரற்ற காலநிலை காரணமாக தொடர முடியாத நிலை உள்ளது. இன்னொரு நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட IT Center மிக விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். அடுத்த முயற்சியாக உசனுக்கென்று பொது மண்டபத்துடன் கூடிய வாசிக சாலை (LIBRARY) அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான புத்தகங்கள் சேர்க்கும் பணி கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கு கொள்ள விரும்புவோர் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். தொடர்புகளுக்கு:
தலைவர் - கனகசபை நகுலன், 1-905-201-7724, president@usan.ca
செயலாளர் - சுப்பிரமணியம் பாஸ்கரன், 1-647-448-7434, secretary@usan.ca
பொருளாளர் - வெற்றிவேலு அஜந்தன், 1-416-833-2120, mailto:treasurer@usan.ca