இலங்கை, இந்திய, மலேசிய நாதஸ்வர சிற்பமாக விளங்கும் நாதஸ்வர வித்துவான் திரு. பஞ்சாபிகேசன் அவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவிக்கபட்டார். கடந்த அக்டோபர் 6 ம் திகதி 2010 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வாழும் போதே கலை உலகிற்குக் கிடைத்த இப்பட்டம் நாதஸ்வர இசைக்குஇன்னும் மகுடம் சூடும் நிகழ்வாகும். கருவில் இருக்கும் போதே உங்கள் நாதஸ்வர இசையால் உசன் மக்கள் வாழ்ந்தார்கள் என்பது மகிழ்வு. உசனில் உங்கள் நாதஸ்வர மூச்சு இசை இன்றும் இனிக்கிறது. எமது கிராமத்துக்காய் எப்போதும் மனமுவந்து நீங்கள் செய்த பணியை எங்கள் சமுதாயம் நினைவில் கொள்ளும். ஈழத்தமிழன் வாழ்வியலில் நாதஸ்வரம் இருக்கும் வரை உங்கள் நினைவும் பவனி வரும். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பட்டத்தால் உங்கள் காலடி பட்ட மண் என்ற பெருமையில் உசன் கிராமமும் மகிழ்வு கொள்கிறது. அனைத்துலக உசன் வாழ் மக்கள் சார்பாக கலையுலக கௌரவ கலாநிதி பஞ்சாபிகேசன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும், அன்பு பாராட்டுகளும்.