அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 30, 2011

திருமண வாழ்த்துக்கள்

 
மல்லாகத்தைச் சேர்ந்த திரு,திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் புதல்வன் ஆதவன் அவர்களும் உசன் மிருசுவிலை சேர்ந்த திரு,திருமதி தயானந்தன்(பபி) அவர்களின் புதல்வி அம்பிகா அவர்களும் இன்று அதாவது 2011-01-30 அன்று திருமணபந்தத்தில் இணைகின்றனர் அவர்கள் எல்லாம் வல்ல உசன் முருகப்பெருமான் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வேண்டுமென்று ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் சார்பாகவும் உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்...நன்றி...


Monday, January 24, 2011

திருமண வாழ்த்துக்கள்


கச்சாயை சேர்ந்த சிதம்பரநாதன்-அகிலன், உசன் விடத்தற்பளையை சேர்ந்த நித்தியானந்தசோதி-டியானி ஆகிய இருவரும் இன்று அதாவது 24.01.2011 அன்று திருமண பந்தத்தில் இணைகின்றனர் இத்தம்பதிகள் எல்லாம்வல்ல உசன் முருகப்பெருமான் திருவருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழவேண்டும் என்று எமது உசன் ஐக்கிய வாலிபர் & உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் இணைந்து உசன் மக்கள் ஒன்றியம் கனடாவும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது உசன் வாழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்தினைதெரிவிக்கின்றோம்.




Wednesday, January 19, 2011

மரண அறிவித்தல்.


உசனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவசோதி அவர்கள் 19.01.2011 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் மற்றும் தவமணி தம்பதிகளின் பாசமிகு அன்பு மகனும், சண்முகம், காலஞ்சென்ற சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,சந்திரா அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
செலின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பூபாலசிங்கம்(பிரான்ஸ்), தெய்வநாயகி(ரதி - யாழ்ப்பாணம்), சிவானந்தசோதி(சந்திரன் - கனடா), சிவபாதம்(பவா - பிரான்ஸ்), நித்தியானந்தசோதி(ஆனந்தன் - கனடா), சிறிபாஸ்கரன்(பிரான்ஸ்), அனுஷ்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஆவார்
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மசாந்தியடைய வேண்டுகிறோம்.
தகவல் :


Sunday, January 9, 2011

உசன் அபிவிருத்தி

 
உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் & உசன் ஐக்கிய வாலிபர் சங்கத்துடன் இணைந்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசனில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஈச்சங்காடு மயான அபிவிருத்தி வேலைகள் சீரற்ற காலநிலை காரணமாக தொடர முடியாத நிலை உள்ளது. இன்னொரு நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட  IT Center மிக விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். அடுத்த முயற்சியாக உசனுக்கென்று பொது மண்டபத்துடன் கூடிய வாசிக சாலை (LIBRARY) அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான புத்தகங்கள் சேர்க்கும் பணி கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கு கொள்ள விரும்புவோர் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். தொடர்புகளுக்கு:
தலைவர் - கனகசபை நகுலன், 1-905-201-7724, president@usan.ca
செயலாளர் - சுப்பிரமணியம் பாஸ்கரன், 1-647-448-7434, secretary@usan.ca
பொருளாளர் - வெற்றிவேலு அஜந்தன், 1-416-833-2120, mailto:treasurer@usan.ca  




Friday, January 7, 2011

கௌரவ கலாநிதி பஞ்சாபிகேசன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்

இலங்கை, இந்திய, மலேசிய நாதஸ்வர சிற்பமாக விளங்கும் நாதஸ்வர வித்துவான் திரு. பஞ்சாபிகேசன் அவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவிக்கபட்டார். கடந்த அக்டோபர் 6 ம் திகதி 2010 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வாழும் போதே கலை உலகிற்குக் கிடைத்த இப்பட்டம் நாதஸ்வர இசைக்குஇன்னும் மகுடம் சூடும் நிகழ்வாகும். கருவில் இருக்கும் போதே உங்கள் நாதஸ்வர இசையால் உசன் மக்கள் வாழ்ந்தார்கள் என்பது மகிழ்வு. உசனில் உங்கள் நாதஸ்வர மூச்சு இசை இன்றும் இனிக்கிறது. எமது கிராமத்துக்காய் எப்போதும் மனமுவந்து நீங்கள் செய்த பணியை எங்கள் சமுதாயம் நினைவில் கொள்ளும். ஈழத்தமிழன் வாழ்வியலில் நாதஸ்வரம் இருக்கும் வரை உங்கள் நினைவும் பவனி வரும். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பட்டத்தால் உங்கள் காலடி பட்ட மண் என்ற பெருமையில் உசன் கிராமமும் மகிழ்வு கொள்கிறது. அனைத்துலக உசன் வாழ் மக்கள் சார்பாக கலையுலக கௌரவ கலாநிதி பஞ்சாபிகேசன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும், அன்பு பாராட்டுகளும்.




Thursday, January 6, 2011

அறிவித்தல்

அன்பான அனைத்துலக உசன்வாழ் உறவுகளுக்கு :
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா உசனில் மேற்கொண்டு வரும் துரித அபிவிருத்திபணிகள் யாவரும் அறிந்ததே இது தொடர்பாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமானது.உசனில் ஐக்கிய வாலிபர் சங்கம் -ஸ்ரீமுருகன் விளையாட்டுகழகம் ஆகியவற...்றுடன் மட்டுமே இணைந்து தனது நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எமது உசன் கட்டமைப்பின் கண்கானிப்பாளர்களாக திரு DR ஜெபனாமகணேசன், தர்மகர்த்தா.திரு.கு.விமலதாஸ் ,கிராமசேவையாளர் திருமதி.செல்வநாயகம் திருDR .மாணிக்கம் ஆகியோர் கடமையாற்றுகின்றனர் . இவை தவிர உசனில் வேறு எந்த சங்கங்களுடனோ அல்லது தனிப்பட்ட நபர்களுடனோ எமது சங்கம் எந்தவிதமான தொடர்புகளும் வைத்திருக்கவில்லை என்பதனையும் எமது சங்கத்தின் பெயரை பாவிக்கும் அதிகாரம் வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதனையும் அன்புடன் தெரிவித்துகொள்கிறோம். எமது நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்களை நீங்கள் நேரடியாகவோ ஈமெயில் வாயிலாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
தலைவர் : கனகசபை நகுலன் 905-201-7724
செயலாளர்:சுப்பிரமணியம் பாஸ்கரன் 647 -448 -7434
பொருளாளர் :வெற்றிவேலு அஜந்தன் 416 -833 -2120


திரு.ஸ்ரீகாந்தன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள்

கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் முயற்சியில் உசனில் அமைக்கப்படும் நூலகத்துக்கான ஒரு தினசரி பத்திரிக்கை மற்றும் ஒரு ஆங்கில வார இதழ் பத்திரிகைக்கான அனுசரணையை எமது விஞ்ஞானஆசிரியர் திரு ஸ்ரீகாந்தன் அவர்கள் தாமாக முன்வந்து ஏற்றுள்ளார்.அவர்களுக்கு எமது அன்பு நன்றிகள். உங்கள் ஆதரவு எமக்கு இன்னும் உற்சாகம் தருகிறது.


உசன் ஆசிர்வாதம் வீதி

உசனில் இருக்கும் ஆசிர்வாதம் வீதியை நிரந்தரமாக புனரமைக்கும் தேவை குறித்து உசன் ஐக்கிய வாலிபர் சங்கம் .கனடா மக்கள் ஒன்றியத்திடம் தெரிவித்திருந்ததுஇது குறித்து அந்த வீதியை அமைத்தDR .திரு.இந்திரன்ஆசிர்வாதம்அவர்கள்.வீதியை புனரமைக்கும் பணியைகனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினூடாக முன்னெடுக்க தனது விருப்பத்தை தெரிவித்தார். இன் நடவடிக்கை குறித்து நாம் உசன் அபிவிருத்தி கட்டமைப்புடன் திட்டமிட்டு வீதியை புனரமைக்கும் ஆரம்பகட்ட பணியை தொடங்கியுளோம். புதிய நுட்ப முறையில் நிரந்தரமாக இந்த வீதியை புனரமைக்கும் பணியில் உசன் வாலிபர் சங்கம்-உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகமும் ஈடுபட்டுள்ளது.




Wednesday, January 5, 2011

திருதிருமதி மிகுந்தன் துஸ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்

 கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் முயற்சியில் உசனில் அமைக்கப்படும் நூலகத்துக்கான தினசரி பத்திரிக்கை அனுசரணையை திருதிருமதி மிகுந்தன் துஸ்யந்தி அவர்கள் தாமாக முன்வந்து ஏற்றுள்ளார்.அவர்களுக்கு எமது அன்பு நன்றிகள். உங்கள் ஆதரவு எமக்கு இன்னும் உற்சாகம் தருகிறது.


2010 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு





உசன் இராமநாதன்மகாவித்தியாலயத்தில்இருந்து 2010 ம் ஆண்டுக.பொ.தஉயர்தரபரீட்சைக்குதோற்றியமாணவர்களில் நான்கு பேர் பல்கலைகளகத்துக்கு.தகமை பெற்றுள்ளனர்
A .பிரதீபன் -A2B
 S .வினோதன்ABC
T .சுபாசினி ABC
Y .வேநிகா 3B
ஆகியமாணவர்களேஇந்தபெறுபேறுகளைபெற்றுள்ளனர்.இவர்களுக்குகனடாஉசன்மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துகளை தெரிவிக்கிறது.





Monday, January 3, 2011

JBN Auto கருணி-கனடாவாழ் உசன் மக்களுக்கு வழங்கும் சலுகை

கனடாவாழ் உசன் மக்களுக்காக இந்த புதிய ஆண்டில் மிக அற்புதமான சலுகை ஒன்றை உசனை சேர்ந்த விநாசித்தம்பி கருணி வழங்குகின்றார். உங்கள் தேவைக்கும் பணத்திற்கும் ஏற்றமுறையில் மிக தரமான பாவித்த தரமான வாகனங்களை. உசன் மக்களுக்கும் தென்மராட்சி மக்களுக்கும் விசேட விலையில் வழங்க முன்வந்துள்ளார். நீங்கள் உசன் அபிவிருத்தி நிதிக்கு அன்பளித்த பற்று சீட்டுடன் சென்றால்200 $ சிறப்பு கழிவுவிலை வழங்கப்படும்.அத்துடன் நீங்கள் தென்மராட்சியை சேர்ந்தவர் என உறுதிபடுத்தினால் இன்னும் கழிவு விலையில் மிக தரமான வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.ஏராளமான மிக தரமான வாகனங்களையும் உங்கள் வசதிக்கேற்ற விலையும் சீரான சேவையும் வழங்கி வரும் கருணி கனடா வாழ் உசன் மக்களுக்காக 2011 ல் சிறப்பு சலுகைகளுடன் காத்திருகின்றார். உங்கள் வாகன தேவையை அவரிடம் கூறுங்கள்.அது நிறைவேறும்.
மேலதிக தொடர்புகளுக்கு:
கருணி:416 -894 -3353
உசன் மக்கள் ஒன்றியம் -416 -833 -2120




 

மேலதிக படங்கள்  :http://www.facebook.com/album.php?id=100001219521044&aid=54668


Sunday, January 2, 2011

உசனில் நூலகம் அமைக்கும் பணி ஆரம்பம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் வழிகாட்டலில் உசன் வாலிபர் சங்கம் மற்றும் ஸ்ரீமுருகன் விளையாட்டுகளகம் இணைந்து முன்னேடுக்குக்கும் அபிவிருத்திபணிகளின்அடுத்த கட்ட முயற்சியாக உசனுக்கென ஒரு நூலகத்தித்காக தனி கட்டிடம் அமைக்கும் முயற்சியின் ஆரம்பகட்பணி கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் அன்பளித்த பணத்தின் மூலம் ஆரம்பிக்கபட்டுள்ளது.
எமது ஒருங்கிணைந்த செயற்பாட்டின் நடவடிக்கையாக நூலகத்தித்காக திரு.கு.விமலதாஸ் அவர்களால் அன்பளிக்கபட்ட காணியில் கட்டிடம் அமைக்கும் பணி சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசனில் அமைக்கபட்டிருக்கும்.கட்டமைப்பு அணிகள் மிகவும் சிறந்த முறையில் நேர்த்தியாக உசன் அபிவிருத்திபணிகளில் ஈடுபட்டுவருவதுடன். அடுத்தகட்ட நகர்வுக்காக புலம்பெயர்வாழ்உசன் மக்களின் உதவியை நாடி நிக்கின்றனர். மிகவும் சிறந்த முறையில் அமைக்கபட்ட நிர்வாகம் உசனில் மிகபெரும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் என்பதில் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் -உசன் ஐக்கிய வாலிபர் சங்கமும் உறுதிகொண்டுள்ளது. உங்களது அன்பு கரங்களை எங்களோடு கோர்க்கும் காலமிது புலம்பெயர் உசன் வாழ் மக்களே உங்கள் அன்பு ஆதரவை கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தோடு இணைத்துகொள்ளுங்கள்.நூலக அபிவிருத்தியின் ஆரம்ப பணிகளின் சில காட்சிகள் இங்கே.



மேலதிக  படங்கள் http://www.facebook.com/album.php?id=100001219521044&aid=54668#!/album.php?aid=52993&id=100001219521044