கனடா -உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் உசன் வாழ் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவும் முகமாக உசன் கிராமத்தில் அமைக்கபட்டுவரும் கணணி பயிற்சி நிலையம் மற்றும்- Internet தொடர்பாடல் நிலையம் அமைக்கும் முயற்சி உசன் வாலிபர் சங்கம் மற்றும் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழக உறுப்பினர்களின் அயராத முயற்சியால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இம் முயற்சிக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் சில கனடா வாழ் அன்பர்கள் மனமுவந்து தாமாக முன்வந்து தங்கள் பங்களிப்பையும் ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் உசன் கிராம அபிவிருத்தியில் ஆர்வம் கொண்ட வைத்திய கலாநிதி திரு .இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் எமது முயற்சியை பாராட்டியதுடன் தனது பங்களிப்பாக உசன் மக்களுக்காக புதிய கணணிகள் உடனடியாக கொள்வனவு செய்வதற்காக $900 பணமும் , மற்றும் இன் நிலையத்திற்கு தேவையான Laminating , Bindinng System ,Laser Trimmer ஆகியவற்றை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய பொருளாளர் அஜந்தன் வெற்றிவேலு விடம் Toronto வில்வைத்து கையளித்தார். திரு .இந்திரன் ஆசிர்வாதம் அவர்களுக்கு
உசன் வாழ் மக்கள்சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது நன்றிகள்.