அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, October 2, 2010

விளையாட்டில் சாதனை படைக்கும் யாழ்ப்பாணம்


தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் வட மாகாண பாடசாலை வீரர்களுக்கு மேலும் இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் 2 வர்ண விருதுகள் நேற்றுக் கிடைத்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கிடையிலான தட களப் போட்டிகள் கடந்த புதன்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்ப மானது.
இதில் நேற்று நடைபெற்ற 17 வயது ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி வீரர் ஏ.யஹானி றொசான் 3.35 மீற்றர் உயரம் பாய்ந்து முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.இதன் மூலம் அளவெட்டி அருணோதயா கல்லூரி தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் இவ் வருடம் மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது.

அத்துடன் வெள்ளிப் பதக்கம் ஒன்றும் பெற்றுள்ளது. இதேவேளை நேற்று நடை பெற்ற தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வீரர் வி.ஹரிகரன் 36.90 மீற்றர் தூரம் எறிந்து முதலாம் இடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் இவரின் சிறந்த வெளிப்படுத்தலுக்கு வர்ண விருதும் வழங்கப்பட்டது. இதனை விட நேற்று நடைபெற்ற 17 வயதுப் பெண்கள் பிரிவு குண்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய வீராங்கனை ஆர்.தர்´கா 9.37 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கல விருதை வென்றார்.
அத்துடன் 19 வயது ஆண்கள் பிரிவு 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி வீரர் ஜோ.எரிக் பிரதாப் வர்ண விருது பெற்றார்.இதன் மூலம் தேசிய மட்ட தடகளப் போட் டிகளில் வட மாகாண வீர வீராங்கனைகள் நேற்று வரை 5 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மற்றும் 2 வர்ண விருதுகளை வென்றுள்ளனர்.