யாழ்ப்பாணத்து வரலாறுகளின் உசன் கிராமம் எப்படி இடம் பிடித்தது என்பதற்கான கட்டுரை ஒன்றின் சிறிய பகுதி (நன்றி வான் தமிழ் இணையம் )
பாண்டிய நாட்டுக்குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.கோம்பிப்பிட்டி வேலணையிலும், சாத்தன்குளம் தங்கோடையிலும், சாத்தனாவத்தை தெல்லிப்பளையிலும், சுழியல் சுழிபுரத்திலும், தம்பன்வயல் மற்றும் நீராவியடி கொக்குவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
உடுமலாவத்தை, காராமட்டை, கல்லாரை, கொங்காவோடை, சிங்காவத்தை, தொளசம்பத்தை, மானாவத்தை முதலிய பெயர்களோடு கொங்குநாட்டுக் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.
மகமதியர் காலத்தில் தென்மராட்சியில் உசன் பகுதியிலும், மரக்காயன் தோட்டம் நவாலிப் பகுதியிலும், துலுக்கன்புழி அல்லைப்பிட்டியிலும் மகமதியர் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பிடித்துள்ளன.
களப்பிரர் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. அதற்கு உதாரணமாக புலோலியில் இருக்கின்ற களப்பிராவத்தையை சொல்லமுடியும்.
கொக்குவில் பகுதியில் உள்ள இயக்குவளை மூலம் யாழ்ப்பாணத்தில் இயக்கர் குடியேற்றம் இருந்ததை உறுதிப்படுத்த முடியும்.
சாவகர்ஓடை சுழிபுரம் பகுதியிலும், சாவன்கோட்டை நாவற்குழி பகுதியிலும் மற்றும் சாவகச்சேரியும் காணப்படுவதன் மூலம் யாவகர் குடியேற்றமும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதை அறியமுடியும்.
இவற்றைவிட ஆந்திரதேசம்,கன்னடதேசம், துலுவதேசம், கலிங்கதேசம், ஒரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் சில குடியேற்றங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.