யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள உசன் பகுதியில் ஏ 9 வீதியில் இன்று காலை 7.15 அளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார் யாழ்ப்பாணத்தி;ல் இருந்து பயணித்த பேரூந்து ஒன்று குறித்த குடும்பஸ்தர் பயணித்த உந்துருளியை மோதியபோதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
பலியானவர், ஒரு பிள்ளையின் தந்தையான திருநெல்வேலியை சேர்ந்த எஸ் ஜெயசந்திரன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.