அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, July 28, 2010

சொகுசுபஸ்சேவை


கனடா மொன்றியலில் இருக்கும் வல்மொறின் முருகன்கோவில் தேர்திருவிழாவுக்கு Toronto விலிருந்து  செல்வதற்கான சொகுசுபஸ் சேவையை உசன் மக்கள் ஒன்றியம் வழங்கியது.உசன் மக்கள்    ஒன்றிய அங்கத்தவர்கள் இந்த பயணத்தில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.









Tuesday, July 27, 2010

கலிஸ்ரஸ் கஜேந்திரன்அவர்களின் மரண அறிவித்தல்

மிருசுவிலை சேர்ந்த அன்ரன் பாக்கியநாதன், குமாரி தம்பதிகளின் ஏகபுதல்வன் கலிஸ்ரஸ் கஜேந்திரன்(பொறியியல் பீட மாணவன்)25-07-2010 அன்று அகாலமரணமானார்.அன்னாரின் இறுதி ஆராதனை 28-07-2010 அன்று, பண்டியன்தாழ்வு சந்தணமாதா ஆலயத்தில் நடைபெற்று, பூதவுடல் கொஞ்சேந்திமாதாமா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


Saturday, July 24, 2010

உசன்ஐக்கியமக்கள்ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல்.


உசன் மக்கள் ஒன்றியம் கனடாவின் வருடாந்த கோடைகால ஒன்று கூடல் வழமைபோன்று நீல்சன் பூங்காவில் நடைபெற்றது.கனடா வாழ் உசன் மக்களும் சிறுவர்களும் இந்த நிகழ்வில் உற்சாகமாககலந்து கொண்டனர் .
சிறுவர்களுக்கான விளயட்டுபோடிகள் ,மதிய உணவு ,BBq
என பலதரப்பட நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.



   தொடர்ந்து இந்தவருடத்திற்கான புதிய நிர்வாகசபை தெரிவும் இடம்பெற்றது .மலையில் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்று ஒன்றுகூடல்நிறைவு பெற்றது .இன் நிகழ்வுக்கு சகல வழிகளிலும் உதவி புரிந்த அன்பு உள்ளங்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
இன் நிகழ்வின் மேலதிக படங்கள் எமது Facebook தளத்தில் பார்வையிடலாம் .






  மேலதிக படங்கள் பார்க்க கீழே உள்ள தொடர்பை அழுத்தவும்.
http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=3110&id=100001219521044


Wednesday, July 14, 2010

பிரசன்னா சிந்துஜா அவர்களின் திருமணவாழ்த்துக்கள்

 உசனை சேர்ந்த திரு திருமதி விநாயகம் கமலா தம்பதிகளின் புதல்வன் பிரசன்னா அவர்களுக்கும் திரு திருமதி தவராசா தம்பதிகளின் புதல்வி சிந்துஜா அவர்களுக்கும் 14 ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு Richmounthill பிள்ளையார் கோவிலில் திருமணம் நடைபெறஉள்ளது.திருமணவிழா சீரும் சிறப்புமாக நடை பெறவேண்டுமேன உசன் மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது






Monday, July 12, 2010

திருமதி பொன்னுத்துரை சிவஞானம் அவர்களின் மரண அறிவித்தல்

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி பொன்னுத்துரை சிவஞானம் நேற்று (12.07.2010) திங்கட்கிழமை கால மானார்.


அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும் பொன்னுத்துரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சிவபாக்கிய சுசீலா, தயாபதி, மகேந்திரராசா, ஜெயசீலன் (திரு), தயா பரன் (டென்மார்க்), நந்தி (லண்டன்), சிவாஸ்கரன் (லண்டன்), நிமால் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும் காலஞ்சென்ற வல்லிபுரம், சிவபாதசுந்தரம், சிவலோகநாயகி, புனிதவதி, இராசபூபதி, கனகசிங் கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.07.2010) செவ் வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உசன், ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய வேண்டுகிறோம்.
தொ.பே: 0776069640
தகவல்: எஸ்.சுபேஸ் (பபா பேரன்)


Tuesday, July 6, 2010

உசன் சந்தியில் வீதி விபத்து குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள உசன் பகுதியில் ஏ 9 வீதியில் இன்று காலை 7.15 அளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார் யாழ்ப்பாணத்தி;ல் இருந்து பயணித்த பேரூந்து ஒன்று குறித்த குடும்பஸ்தர் பயணித்த உந்துருளியை மோதியபோதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
பலியானவர், ஒரு பிள்ளையின் தந்தையான திருநெல்வேலியை சேர்ந்த எஸ் ஜெயசந்திரன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.