உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை மகேந்திரநாதன் அவர்கள்.08.05.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றசெல்லப்பா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தசீலன்(இலண்டன்), தசிகரன்(இலண்டன்), தர்சிகா(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மதனகாந்தனின் அன்பு மாமனாரும், சின்னராசாவின் அன்புச் சகோதரனும், பத்மாவதி, கனகரத்தினம், பத்மநாதன், யோகரத்தினம், கனகம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்
குடும்பத்தினர்